நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி
जनता समाजवादी पार्टी, नेपाल
சுருக்கக்குறிPSP-N
தலைவர்அசோக் ராய்
(கூட்டமைப்புக் குழு)
உபேந்திர யாதவ்
(மத்திய குழு)
நேபாள பிரதிநிதிகள் சபையில் கட்சித் தலைவர்உபேந்திர யாதவ்
தொடக்கம்22 ஏப்ரல் 2020; 3 ஆண்டுகள் முன்னர் (2020-04-22)
இணைந்தவைநேபாள ராஷ்டிரிய ஜனதா கட்சி
நேபாள சமாஜ்வாதி கட்சி, 2019
தலைமையகம்பாலகுமாரி, லலித்பூர், நேபாளம்
கொள்கைஜனநாயக சோசலிசம், சமயசார்பின்மை, கூட்டாட்சி தத்துவம்
அரசியல் நிலைப்பாடுஇடதுசாரி அரசியல்
நேபாள பிரதிநிதிகள் சபையில் கட்சி உறுப்பினர்கள்
12 / 275
நேபாள தேசிய சபையில் கட்சி உறுப்பினர்கள்
3 / 59
நேபாள மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர்கள்
20 / 550
நகராட்சித் தலைவர்கள்
30 / 753
நகராட்சி உறுப்பினர்கள்
1,548 / 35,011
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
Flag of Janata Samajbadi Party.svg
இணையதளம்
peoplesocialist.org

நேபாள மக்கள் சோசலிஸ்டு கட்சி (People's Socialist Party, Nepal) (சுருக்கமாக: PSP-N; நேபாளி: जनता समाजवादी पार्टी, नेपाल), இதனையும் ஜனதா சமாஜ்வாதி கட்சி என்றும் அழைப்பர். நேபாளம் நாட்டின் ஆறாவது பெரிய அரசியல் கட்சி ஆகும்.[1]2022 மாதேஷ் சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி மாதேஷ் மாநிலத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.[2] அண்மையில் இக்கட்சியின் தலைவர்களான மகந்தா தாக்கூர், பாபுராம் பட்டாராய், மகேந்திர ராய் யாதவ் மற்றும் ரேஷம் லால் சௌத்திரி ஆகியவர்களால் இக்கட்சி பலவாக பிளவு பெற்றது.[2][3]இக்கட்சியின் தேசிய தலைவர் உபேந்திர யாதவ் ஆவார்.

2022 நேபாள பொதுத் தேர்தலில்[தொகு]

2022 நேபாள பொதுத்தேர்தலில் இக்கட்சி நேபாள பிரதிநிதிகள் சபையில் 12 உறுப்பினர்களையும்;நேபாள தேசிய சபையில் 3 உறுப்பினர்களையும்; நேபாள மாநில சட்டமன்றங்களில் 20 உறுப்பினர்களையும்; உள்ளாட்சித் தேர்தல்களில் 30நகராட்சித் தலைவர்களையும்; 1548 நகராட்சி உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]