நேபாளி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேபாளி (Nepali) வி. துரை இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பரத் (மூன்று வேடங்களில்), மீரா ஜாஸ்மின், கோவிந்த், சங்கீதா, பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ராம சரவணன் தயாரிப்பில், சிறீகாந்து தேவா இசை அமைப்பில், 11 ஏப்ரல் 2008 ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தின் வசன கர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகர் ஆவார். பாக்ஸ் ஆபீசில் தோல்வியை தழுவியது.

நடிகர்கள்[தொகு]

பரத் (மூன்று வேடங்களில்), மீரா ஜாஸ்மின், கோவிந்த், சங்கீதா, பிரேம், ராஜா ரவீந்திரா, கணேஷ்கர், மயில்சாமி (நடிகர்), ஆர்யன், ஆர். செல்வகுமார்.

கதைச்சுருக்கம்[தொகு]

ஒரு பலசரக்கு கடையில் நேபாளி (பரத்) வேலை பார்த்து வருகிறான். அவன் திடீரென்று சில நபர்களை கொன்று, சடலத்தில் துப்புகளை விட்டுச்செல்கிறான். போலீஸ் அதிகாரி கவுதம் (பிரேம்) இந்த வழக்கை விசாரித்து, கொலையாளியை கண்டுபிடிக்க பொறுப்பேற்கிறார்.

அதே நேரம், ஒரு தண்டனை கைதி (அதுவும் பரத்) விரக்தியின் காரணமாக அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறான். சிறை காவலர் அவனை காப்பாற்றுகிறார்.

துப்புகளை ஆராய்ந்து குற்றவாளியை பிடிக்க நேரிடும் பொழுது, அடுத்த கொலையை செய்து விட்டு கொலையாளி சாதூர்யமாக தப்பிவிடுகிறான்.

கார்த்திக்கும் (அதுவும் பரத்) ப்ரியாவும் காதல் செய்து திருமணம் செய்கிறார்கள். ஒரு காவல் அதிகாரியிடம் தன்னை காப்பாற்றிக்கொள்ள தற்கொலை செய்துகொள்கிறாள் ப்ரியா. மூன்று வெவ்வேறு களங்கள் காட்சிப்படுத்தப்பட்டாலும், அவை மூன்றையும் செய்வது ஒரே நபர்தான் என்று தெரியவருகிறது. நேபாளி காவல்த்துறையிடம் பிடிபட்டானா என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

சிறீகாந்து தேவா இப்படத்தின் இசை அமைப்பாளர் ஆவார். 5 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 2008 ஆம் ஆண்டு வெளியானது.[1]

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியது.

வரவேற்பு[தொகு]

குழப்பமான திரைக்கதையை கொண்ட படம் என்றும், கதை கரு நன்றாக இருந்தாலும் சரியான முறையில் படமாக்க தவறியதாகவும், கதையாகத்தில் புதுமை இருந்தாலும் கதை முன்பு கேட்டதுபோல் இருந்ததாகவும், விமர்சனம் செய்யப்பட்டது.[2][3][4]

வெளி-இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "https://gaana.com". {{cite web}}: External link in |title= (help)
  2. "http://www.sify.com/movies/nepali-review-tamil-14648106.html". Archived from the original on 2013-06-25. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06. {{cite web}}: External link in |title= (help)
  3. "http://www.behindwoods.com". {{cite web}}: External link in |title= (help)
  4. "http://www.nowrunning.com". Archived from the original on 2016-05-11. பார்க்கப்பட்ட நாள் 2019-03-06. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளி_(திரைப்படம்)&oldid=3709941" இலிருந்து மீள்விக்கப்பட்டது