உள்ளடக்கத்துக்குச் செல்

நேபாளத்தில் பெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் பெண்கள்
பாலின சமனிலிக் குறியீடு
மதிப்பு0.485 (2012)
தரவரிசை102வது
தாய் இறப்புவீதம் (100,000க்கு)170 (2010)
நாடாளுமன்றத்தில் பெண்கள்33.2% (2012)
உயர்நிலைக் கல்வி முடித்த பெண் 25 அகவையினர்17.9% (2010)
பெண் தொழிலாளர்கள்80.4% (2011)
உலகளாவிய பாலின இடைவெளிக் குறியீடு[1]
மதிப்பு0.671 (2018)
தரவரிசை105வது out of 136

நேபாளத்தில் பெண்கள் (Women in Nepal) நேபாளத்தின் பெண்கள் நிலை என்பது வரலாறு முழுவதும் மாறுபட்டே இருந்துள்ளது. 1990களின் முற்பகுதியில், வேறு சில ஆசிய நாடுகளைப் போலவே, நேபாளத்திலும் பெண்கள் பொதுவாக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆண்களுக்குக் கீழ்ப்பட்டிருந்தார்கள். வரலாற்று ரீதியாக, நேபாளம் முக்கியமாக ஆணாதிக்க சமூகமாக இருந்தது. அங்கு பெண்கள் பொதுவாக ஆண்களுக்கு அடிபணிந்தே இருந்துள்ளனர். ஆண்கள் குடும்பத்தின் தலைவராகவும் பெண்களை விட உயர்ந்தவராகவும் கருதப்பட்டனர். மேலும், சமூக விதிமுறைகளும், மதிப்புகளும் ஆண்களுக்கே ஆதரவாக இருந்தன. சமுதாயத்தில் மகன்களுக்கு ஆதரவான இந்த வலுவான சார்பு, மகள்கள் பிறப்பிலிருந்து பாகுபாடு காட்டப்பட்டு, வளர்ச்சியின் அனைத்து அம்சங்களையும் அடைய சம வாய்ப்புகள் இல்லை. [2] உரிமைகள், கல்வி, சுகாதாரம், பெற்றோரின் சொத்துரிமைகள், சமூக நிலை, இறந்த பெற்றோரின் இறுதி சடங்குகள் உட்பட பல சலுகைகளை மகள்கள் இழந்துவிட்டனர். மேலும், பெண்கள் மற்றவர்களின் சொத்தாகவும், பொறுப்புகளாகவும் கருதப்பட்டனர்.[3]

மாற்றம்[தொகு]

கடந்த நூற்றாண்டில், நேபாளத்தில் பெண்களின் பங்கிலும், நிலையிலும் வியத்தகு நேர்மறையான மாற்றம் ஏற்பட்டு, பாலின சமத்துவமின்மைக்கான தடையை குறைத்தது. 1990 அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் இனம், சாதி, மதம் அல்லது பாலின அடிப்படையில் பாகுபாடின்றி அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தாலும், சமுதாயத்தை நவீனமயமாக்கியதும், பொது மக்களுக்கு கல்வி சென்றடைந்ததும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.[4] நவீன நேபாள சமுதாயத்தில் பெண்களின் பாத்திரங்கள் பல்வேறு வழிகளில் மாறிவிட்டன. மோதலுக்குப் பிந்தைய இடைக்கால சூழல் இருந்தபோதிலும், இன்று, நேபாளம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி வேகமாக முன்னேறுவது மட்டுமல்லாமல், அது வறுமை, பசி, உலகளாவிய ஆரம்பக் கல்வி, குழந்தை இறப்பு, தாய்வழி சுகாதாரம், பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இலக்குகளை அடைந்து வருகிறது. சட்டமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வியத்தகு முறையில் 1991 நவம்பரில் நடந்த தேர்தல்களில் 29% ஆக உயர்ந்தது. [5]

தலைமைப் பொறுப்பு[தொகு]

பெண்கள் இப்போது தலைமைப் பாத்திரங்களை எடுத்து அனைத்து நிலைகளிலும் முடிவெடுப்பதில் பங்கேற்கிறார்கள். பாலின சமத்துவ கடமைகளின் பொறுப்புணர்வையும் கண்காணிப்பையும் அதிகரிக்கவும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் நெறிமுறை மற்றும் செயல்பாட்டு அம்சங்களுக்கிடையேயான தொடர்புகளை நிறுவவும் வலுப்படுத்தவும் அரசாங்கத்தின் ஈடுபாடு அதிகரித்துள்ளது.[5] இன்று, நேபாள பெண்கள் கலாச்சார மரபுகளை மீறி, சமூகத் தலைவர்களாகவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாகவும், அரசியல்வாதிகளாகவும், வணிக உரிமையாளர்களாகவும் மாறி வருகின்றனர். [6] அக்டோபர் 2015இல், நேபாளம் அதன் முதல் பெண் குடியரசுத் தலைவராக வித்யா தேவி பண்டாரியைத் தேர்ந்தெடுத்தது . [7] மற்ற புகழ்பெற்ற நேபாளப் பெண்களில் சிஎன்என்னின் "வருடத்தின் நாயகி" திட்டத்தின் வெற்றியாளர்களான அனுராதா கொய்ராலா, புஷ்பா பாஸ்நெட், எவரெஸ்ட் பசங்க் லாமு ஷெர்பா, சர்வதேச விருது பெற்ற விளையாட்டு வீராங்கனைகள் மீரா ராய், புபு லாமு காத்ரி, முதல் பெண் தலைமை நீதிபதி சுசீலா கார்கி ஆகியோர் அடங்குவர் . [8]

நேபாள பெண் பாரம்பரிய உடையில் இரு பெண், 1900கள்

சட்டம்[தொகு]

1990 ஆம் ஆண்டின் நேபாள இராச்சியத்தின் அரசியலமைப்பில் பாலின அடிப்படையில் எந்த நபரும் பாகுபாடு காட்டப்படக்கூடாது என்பதற்கான உத்தரவாதம் இருந்தது. மேலும் 1991ஆம் ஆண்டில் அரசாங்கம் பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் நீக்குவதற்கான உடன்பாட்டை அங்கீகரித்தது.

1975 ஆம் ஆண்டு பொது சட்டத் திருத்தமானது பெண்களுக்கு சொத்துரிமை குறித்த முதல் தெளிவான ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியது. 35 வயது வரை திருமணமாகாத ஒரு பெண்ணுக்கு சொத்து வாரிசுரிமையாக கிடைக்கும் என்று அது தீர்ப்பளித்தது. 2002ஆம் ஆண்டில், பிறப்பிலிருந்து பெண்களுக்கு சொத்தை பெறும் உரிமையை வழங்கும் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் திருமணத்தின் போது எந்தவொரு சொத்தும் பெற்றோரின் குடும்பத்திற்கு திருப்பித் தரப்பட வேண்டும். அதற்கு பதிலாக மனைவி தனது கணவரின் சொத்துக்கு சமமான உரிமையைப் பெறுகிறார். 2002 சட்டத்தில் பெண்களின் உரிமைகள், குறிப்பாக சில நிபந்தனைகளின் கீழ் ஒரு பெண்ணுக்கு விவாகரத்து செய்யும் உரிமை, கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குதல் ,கற்பழிப்பவர்களுக்கு அதிகரிக்கும் தண்டனைகள் போன்ற பிற விதிமுறைகளும் அடங்கும். [9] நேபாளத்தின் இடைக்கால அரசியலமைப்பு 2063 பெண்களின் நிலையை உயர்த்த சில ஏற்பாடுகளை கொண்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் ஒரு மகள் கேட்டால் சமமான பெற்றோர் சொத்தைப் பெறலாம், ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்து, அவருடைய சொத்தில் 50% பெறலாம். ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலும் ஒரு குழந்தை தனது தாயின் பெயரில் குடியுரிமை பெறலாம். பெண்களுக்கான 20% ஒதுக்கீடு பாதுகாக்கப்படும். பெண்களுக்கு 33% இடங்கள் நாடாளுமன்றத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள் நாட்டின் முக்கிய அரசியலில் பெண்கள் இருக்கவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுவாக இருக்கவும் செய்யப்படுகின்றன.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை 2018" (PDF). World Economic Forum. pp. 10–11.
  2. Bhattarai, Arjun Kumar.
  3. Encyclopaedia of women in South Asia. Mittra, Sangh., Kumar, Bachchan, 1958-. Delhi, India: Kalpaz Pub. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8178351870. இணையக் கணினி நூலக மைய எண் 54697784.{{cite book}}: CS1 maint: others (link)
  4. Women in Nepal. Mathema, Padma., Acharya, Birbhadra., Asian Development Bank. Programs Department (West), Asian Development Bank. Office of Environment and Social Development. [Philippines]: Asian Development Bank, Programs Dept. West and Office of Environment and Social Development. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9715612687. இணையக் கணினி நூலக மைய எண் 48393329.{{cite book}}: CS1 maint: others (link)
  5. 5.0 5.1 "Nepal Country Page - UN Women Asia Pacific". 
  6. "Community leaders, politicians and business owners: are women leading a cultural shift in Nepal?". 2017-08-15. 
  7. Swift, Richard.
  8. "7 Women Who Have Made History in Nepal". 2016-03-14. 
  9. Women's Property Right Movement and Achievement of the 11th Amendment of Civil Code, Friedrich-Ebert-Stiftung (FES) Nepal Office

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேபாளத்தில்_பெண்கள்&oldid=3270466" இலிருந்து மீள்விக்கப்பட்டது