நேதல்லூர் தேவி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேதல்லூர் தேவி கோவில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் கருகாசல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு தேவி கோவில் ஆகும். சங்கனாச்சேரி - வழூர் மற்றும் கோட்டயம் - புனலூர் மாநில நெடுஞ்சாலைகள் நேதல்லூர் என்ற இடத்தில் சந்திக்கிறது, மேலும் இத்தளம் கோட்டயத்திலிருந்து கருகாசல் செல்லும் பாதையில் 19 கிலோ மீட்டர் தூரத்திலும் மற்றும் சங்கனாச்சேரி - வழூர் பாதையில் சுமார் 16 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.

இது கேரளத்தில் அமைந்துள்ள மிகவும் புகழ் பெற்ற துர்க்கா தேவி கோவில்களில் ஒன்றாகும். இங்கு துர்க்கா தேவி மகிஷசுரமர்த்தினி வடிவத்தில் நிலைகொண்டுள்ளாள். நான்கு கரங்கள் கொண்டு அன்னை "சதுர்பாஹு"வாக அழகாக காட்சி தந்து பக்தர்களை அருள் பாலிக்கிறாள்.

இந்தக் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய உற்சவம் திருக்கார்த்திகை மகோற்சவம் ஆகும், இது விருச்சிக மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) நடைபெறுகிறது மேலும் நவராத்திரி பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீபரம்பூர் இல்லத்து நீலகண்டன் நம்பூதிரிப் பாடு இந்தக் கோவிலின் முக்கிய தந்திரியாகும். மேலும் சம்பகரை என்எஸ்எஸ் கரயோகம் இந்தக் கோவிலை நிர்வகித்து வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேதல்லூர்_தேவி_கோவில்&oldid=3826573" இலிருந்து மீள்விக்கப்பட்டது