நேகா கலை அருங்காட்சியகம், உபுத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேகா கலை அருங்காட்சியகம்
Foliage at the Neka Art Museum.jpg
நிறுவப்பட்டதுசூலை 7, 1982 (1982-07-07)
அமைவிடம்பாலி, இந்தோனேசியா
வகைகலை அருங்காட்சியகம்
இயக்குநர்சுதேஜா நேகா


நேகா கலை மியூசியம் (Neka Art Museum) என்பது இந்தோனேசியாவின் பாலி நகரில் உபுத் நகரில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகமாகும்,[1][2] இந்த அருங்காட்சியகம் பாலி ஆசிரியரான சுதேஜா நேகாவால் நிறுவப்பட்டது, அவர் ஓவியர்களான ருடால்ப் பொன்னெட் மற்றும் ஆரி ஸ்மிட் உள்ளிட்ட ஓவியர்களின் உதவி மற்றும் ஆலோசனைகளைப் பெற்று இக் கலையை சேகரித்தார். , இந்த அருங்காட்சியகம் 1982 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது

வரலாறு[தொகு]

அபிமன்யுவின் மரணம், 19 ஆம் நூற்றாண்டு

பாண்டே வாயன் சுடேஜா நேகா என்பவர் முதலாம் வயன் நேகாவின் மகன் ஆவார். பாண்டே வாயன் சுடேஜா நேகா மிகச் சிறந்த மர செதுக்குநர் ஆவார். அவர் பிதாமகன் அமைப்பில் ஒரு உறுப்பினராக இருந்தார். அவர் ஒரு ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். ஆனால் அவரது தந்தையின் கலைப்படைப்புகளை அமைக்க உதவுவதற்கும், அவருடைபாலி ஓவியங்களை ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என்ற பணியில் ஈடுபட ஆரம்பிக்கவே, கற்பிப்பதை கைவிட முடிவு செய்தார். 1966 ஆம் ஆண்டில் ஒரு சிறிய கடையிலிருந்து தொடங்கி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தர ஓவியங்களை விற்கும் பணியில் ஈடுபட்டார். பல வெளிநாட்டுப் பயணிகள் அவற்றை நாட்டை விட்டு வெளியே எடுத்துச் சென்றனர். இந்த சூழலில் பாலி கலையை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த அவர் படைப்புகளை சேகரிக்கத் தொடங்கினார். 1975 ஆம் ஆண்டில், டச்சு கலைஞரான ருடால்ப் பொன்னட்டுடன் சுதேஜா நேகா வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். தான் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தோனேசியாவில் காண முடியாத பாலிக் கலையின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைந்த பொருள்களைக் கண்டார். தாய்நாடு திரும்பிய பின்னர் அவர் நேகா கலை அருங்காட்சியகத்தை மியூசியத்தை நிறுவ முடிவு செய்தார்.[3]

வடிவமைப்பிற்கான கருத்துரு[தொகு]

இந்த அருங்காட்சியகம் பாரம்பரிய பாலிக் கட்டிடக் கலையினை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. தனித்தனியாகக் கட்டிடங்களைக் கொண்ட அந்த அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு கட்டடத்திலும் வெவ்வேறு வகையான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. பார்வையாளர்கள் பல வகையான தொடர்ச்சியான காட்சிக் கூடங்களின் வழியாக நடந்து செல்லும் வசதி அமைந்துள்ளது. செவ்வியல் ஓவியங்கள் தொடங்கி சமகால இந்தோனேசிய கலை பாணி வரையிலான அனைத்தும் அங்கு உள்ளன. இவற்றில் வெளிநாட்டு கலைஞர்களால், பாலியின் கலையால் தாக்கம் பெற்ற, உருவாக்கம் பெற்ற கலைப்பொருள்கள் காணப்படுகின்றன.

காட்சி நேரம்[தொகு]

இந்த அருங்காட்சியகம் கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது பாலியின் மிகச் சிறந்த கலைஞர்களின் படைப்புகள் இங்கு காணப்படுகின்றன. பாலி கலையின் வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ள இந்த அருங்காட்சியகம் துணை செய்கிறது. பாலியில் அமைந்துள்ள அருங்காட்சியகங்களில் அதிகமான காட்சிக்கூடங்களைக் கொண்ட பெருமையுடையது. இந்தோனேசியாவின் கலைஞர்களுடைய பலவகையான படைப்புகளை இங்கு காணலாம். அவ்வாறே உலக அளவில் பெயர் பெற்ற ஓவியக் கலைஞர்களின் படைப்புகளையும் இங்கு காணலாம். உபுத் என்னுமிடத்திலிருந்து இந்த அருங்காட்சியகத்திற்கு 10 நிமிட பயணத்தில் மகிழ்வுந்தில் வந்து சேரலாம். தினமும் திறந்திருக்கின்ற இந்த அருங்காட்சியகம் ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுதிலும், அரசு விடுமுறை நாள்களிலும் மூடப்பட்டிருக்கும்.[4]

சேகரிப்புகள்[தொகு]

பேய் மாற்றம், 19 ஆம் நூற்றாண்டு

செவ்வியல் பொம்மலாட்ட பாணி ஓவியமானது 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அல்லது அதற்கு முந்தைய காலத்திய ஓவியம் பெரும்பாலும் அநாமதேயமானது அங்கு காணப்படுகிறது. அதில் மங்கு முரா, முதலாம் நான் நியோமன் அர்கானா ஆகியோரின் படைப்புகள் உள்ளன.

உபுட் பாணி ஓவியமானது 1920 களுக்குப் பிறகுள்ள காலத்தைச் சேர்ந்தவை. இந்த படைப்புகளில் ஐரோப்பிய ஓவியர்களின் தாக்கத்தைக் காணமுடியும்.

குறிப்புகள்[தொகு]

  1. Lenzi, Lola, Museums of Southeast Asia, 2004, Editions Didier Millet Pty Ltd,
  2. Neka Art Museum
  3. Suteja Neka and the Neka Art Museum, Yayasan Dharma Seni Museum Neka. 2002. ISBN 9789798356056. p.115
  4. Neka Art Museum