நேகா கக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேகா கக்கர்
Neha Kakkar at Filmcity.jpg
நேகா கக்கர்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு6 சூன் 1988 (1988-06-06) (அகவை 33)[1][2]
ரிசிகேசு, உத்தராகண்டம்[3]
பிறப்பிடம்இந்தியா
இசை வடிவங்கள்பாலிவுட்
தொழில்(கள்)பாடகி
இசைத்துறையில்2006 முதல் தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்
 • டி. சீரீஸ்
 • ஜீ மியூசிக் கம்பெனி
இணைந்த செயற்பாடுகள்
 • பிலால் சயீத்
 • பொஹிமியா
 • இக்கா சிங்
 • யாமா புத்தா
இராஜ் வீரரத்னே
இணையதளம்https://www.nehakakkar.com

நேகா கக்கர் (Neha Kakkar) (பிறப்பு ஜீன் 6, 1988) ஒரு இந்தியப் பாடகி ஆவார்.[4] 2006 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியான (இந்திய ஐடல்) பருவம் 2 இல் போட்டியிட்டு வென்றவர். மேலும் அதே நிகழ்ச்சியின் பத்தாம் பருவத்தில் ஒரு நீதிபதியாக இருந்தவர் ( இந்திய ஐடல் 10 ).[3] சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "காமெடி சர்க்கஸ் கே தான்சேன்" தொடரில் தோன்றியுள்ளார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "ச ரி க ம ப லிட்டில் சாம்ப்ஸ்" பாடலுக்கான நேரடி நிகழ்ச்சியில் நீதிபதியாக இருந்தார்.[5]

இவர் 2008இல் தனது முதல் இசைத்தொகுப்பான "நேகா தி ராக் ஸ்டார்" ஐ வெளியிட்டார். இதற்கு இசை அமைத்தவர்கள் மீட் சகோதரர்கள் ஆவர்.[6] இவர், 'யாரியன்' படத்தில் வரும் "சன்னி சன்னி", 'தி ஷௌகீன்ஸ்' படத்தில் வரும் "மனாலி டிரான்ஸ்" பாடல்களையும், 'காபர் இஸ் பேக்' படத்தில் வரும் "ஆவ் ராஜா" எனத் தொடங்கும் பாடலை ஹனி சிங்குடன் இணைந்து பாடியுள்ளார். 'பாட்டா போஸ்டர் நிகாலா ஹீரோ' படத்தில் வரும் "தட்டிங் நாச்", 'குயின்' படத்தில் வரும் "லண்டன் துமக்டா", 'சத்யமேவ ஜயதே' படத்தில் வரும் "தில்பார்" பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், பாடகர் 'மெயங் சங்' குடன் இணைந்து "ஹஞ்சு" மற்றும் பாடகர் 'கிப்பி கிரெவால்' லுடன் இணைந்து "பாட் லைங்கெ" போன்ற இசைத் தொகுப்புகளிலும் பாடியுள்ளார்.[7]

இளமைப் பருவம்[தொகு]

கக்கர் உத்தராகண்டத்திலுள்ள ரிசிகேசுவில் பிறந்தார்.[3] இவர் பின்னணிப் பாடகர் சோனு கக்கரின் இளைய சகோதரியாவார்.[8] இவருடைய மற்றொரு சகோதரை டோனி கக்கரும் பாடகராவார்.[9][10] கக்கர், புது தில்லி, உத்தம் நகரிலுள்ள 'நியூ ஹோலி பப்ளிக் பள்ளியில்' படித்தார். கக்கர் (இந்திய ஐடல்) பருவம் 2 இல் பங்கு பெற்ற போது பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். கக்கர் சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தன் நான்காவது வயதிலேயே பாட ஆரம்பித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. India.com Entertainment Desk (6 June 2016). "Neha Kakkar birthday special: The Queen of blockbuster hits turns 28". India.com. http://www.india.com/showbiz/neha-kakkar-birthday-special-the-queen-of-blockbuster-hits-turns-28-1237772/. பார்த்த நாள்: 17 December 2017. 
 2. Naziya Alvi (19 June 2006). "Idol-finalist dejected after 'death'". ஹிந்துஸ்தான் டைம்ஸ். http://www.hindustantimes.com/india/idol-finalist-dejected-after-death/story-B83EcsG8tIHQLywhe04RUN.html. பார்த்த நாள்: 17 December 2017. 
 3. 3.0 3.1 3.2 "Indian Idol profile - Neha Kakkar". சிஃபி. மூல முகவரியிலிருந்து 8 June 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 February 2014.
 4. Sen, Torsha (14 November 2013). "Feels great to be compared to Shakira: Neha Kakkar". ஹிந்துஸ்தான் டைம்ஸ். மூல முகவரியிலிருந்து 20 டிசம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 11 February 2014.
 5. Aastha Atray Banan (13 March 2016). "How Neha Kakkar's decision to give the selfie a twist changed her life". பார்த்த நாள் 4 April 2018.
 6. Tajdar Ahmad Khan (16 June 2008). "Rocking star?". தி இந்து. பார்த்த நாள் 11 February 2014.
 7. Hemchhaya De (26 January 2014). "Big stars, small screens". மூல முகவரியிலிருந்து 6 ஆகஸ்ட் 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 23 April 2018.
 8. "Raksha Bandhan: Bollywood Sends Love to Siblings, Fans; See Pics" (26 August 2018). பார்த்த நாள் 17 November 2018.
 9. Priyanka Rajpal (22 January 2018). "7 romantic pictures of singer Neha Kakkar with rumored boyfriend Anshul Garg". பார்த்த நாள் 17 November 2018.
 10. "NT Exclusive : Suave singer Tony Kakkar reveals her bond with sis Neha Kakkar" (26 July 2018). பார்த்த நாள் 17 November 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
நேகா கக்கர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_கக்கர்&oldid=3268420" இருந்து மீள்விக்கப்பட்டது