நேகா அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நேகா அகர்வால்
Neha Aggarwal
தேசியம் இந்தியா
வதிவிடம்தில்லி, இந்தியா
விளையாடும் விதம்வலது கை ஆட்டக்கார்ர்
பிறப்பு11 சனவரி 1990 (1990-01-11) (அகவை 32)
உயரம்1.70 m (5 ft 7 in)[1]
எடை67 kg (148 lb)[1]

நேகா அகர்வால் (Neha Aggarwal) என்பவர் இந்தியாவைச் சேர்ந்த மேசைப் பந்தாட்ட விளையாட்டு வீர்ர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு சனவரி மாதம் 11 ஆம் நாள் பிரந்தார். சீனாவின் பீகிங் நகரில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இவர் பங்கேற்றார். இந்தியாவின் சார்பாக மேசைப் பந்து விளையாட்டில் பங்கேற்ற ஒரே பெண் வீராங்கனை நேகா அகர்வால் ஆவார். பொலௌமி கதாக் மற்றும் மவுமா தாசு ஆகியோரை வீழ்த்தியதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். தில்லியைச் சேர்ந்த இப்பெண் தில்லி ஆர்.கே புரத்திலுள்ள பப்ளிக் பள்ளியில் தன்னுடைய பள்ளிப் படிப்பையும், தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட செயிண்ட் சிடீபன் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். அகமதாபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் நடைபெற்ற தெசிய இளையோர் மேசைப்பந்து போட்டியில் இளையோர் தேசிய மேசைப்பந்து சாம்பியன் என்ற பட்டத்தை வென்றார். சீனாவில் பிறந்த ஆத்திரேலிய மங்கையான இயியாங் பேங் லேயிடம் தோல்வியைச் சந்தித்த்தால் ஒலிம்பிக்கில் இவருக்கு பதக்கம் கிடைக்கவில்லை. தற்போது இவர் விளையாட்டு மேலாண்மை பட்டமேற்படிப்பை அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துவருகிறார் [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Neha Aggarwal Profile". Yahoo!. 27 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 December 2013 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Paddler Neha Aggarwal makes early exit". 2011-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-12-21 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேகா_அகர்வால்&oldid=3349839" இருந்து மீள்விக்கப்பட்டது