நேஆ. நேபெ. இ. மா. சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்ஹாட்டன் நகரில் உள்ள கிரீன்விச் கிராமம் நேர்பாலீர்ப்பாளர்கள் வசிக்கும் பகுதியாகும். அங்குள்ள ஸ்டோன்வால் இன் எனப்படும் அருந்தகம் ஒன்று வானவில் பெருமைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சி.[1][2][3]

நேபெ. நேஆ. இ. மா. சமூகம் (LGBT community) என்பது நேர்பாலீர்ப்பு பெண், நேர்பாலீர்ப்பு ஆண், இருபாலீர்ப்பாளர், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பிற புதுமர்களை உள்ளடக்கிய சமூக இயக்கத்தைக் குறிக்கிறது. இந்த சமூகங்கள் பொதுவாக பெருமை, பன்முகத்தன்மை, தனித்துவம் மற்றும் பாலுணர்வு ஆகியவற்றைக் கொண்டாடுகின்றன. பெரிய சமூகத்தில் இருக்கும் பன்முகத்தன்மை, நேர்பாலீர்ப்புக்கு எதிரான வெறி, இருவெறி, மாற்றுப் பாலினத்தவருக்கு எதிரான வெறி, பாலுறவு மற்றும் இணக்கமான அழுத்தங்களுக்கு எதிரான வலுவான இயக்கமாக இச்சமூகம் உள்ளதாக எல்ஜிபிடி ஆர்வலர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் கருதுகின்றனர். பெருமை என்பது LGBT சமூகத்தின் அடையாளத்தையும் கூட்டு பலத்தையும் குறிக்கின்ற சொல்லாகப் பயன்படுத்தப்படுகின்றது; பெருமை அணிவகுப்புகள் இச்சொல்லுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. எல்ஜிபிடி சமூகம் அரசியல் சார்பற்றதாகும்.

LGBT சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் குழுக்களில் நேர்பாலீர்ப்பு கிராமங்கள், LGBT உரிமைகள் அமைப்புகள், நிறுவனங்களில் LGBT பணியாளர் குழுக்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் LGBT மாணவர் குழுக்கள் மற்றும் LGBT-உறுதிப்படுத்தும் மதக் குழுக்கள் ஆகியவை அடங்கும்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் எல்ஜிபிடி உரிமைகளை ஊக்குவிக்கும் சிவில் உரிமைகளுக்கான இயக்கங்களில் எல்ஜிபிடி சமூகங்கள் தங்களை ஒழுங்கமைக்கவும் ஆதரிக்கவும் செய்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Julia Goicochea (August 16, 2017). "Why New York City Is a Major Destination for LGBT Travelers". The Culture Trip. January 2, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. February 2, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. Eli Rosenberg (June 24, 2016). "Stonewall Inn Named National Monument, a First for the Gay Rights Movement". The New York Times. https://www.nytimes.com/2016/06/25/nyregion/stonewall-inn-named-national-monument-a-first-for-gay-rights-movement.html. 
  3. "Workforce Diversity The Stonewall Inn, National Historic Landmark National Register Number: 99000562". National Park Service, U.S. Department of the Interior. March 6, 2016 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. April 21, 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நேஆ._நேபெ._இ._மா._சமூகம்&oldid=3440073" இருந்து மீள்விக்கப்பட்டது