உள்ளடக்கத்துக்குச் செல்

நெஸ்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெஸ்டி நிறுவனம்
Neste Corporation
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1948 (1948)
தலைமையகம்யெஸ்ப்பூ, பின்லாந்து
தொழில்துறைஎண்ணெய், வாயு தொழிற்துறை
உற்பத்திகள்எண்ணெய் சுத்திகரிப்பு
வருமானம்€15.011 பில். (2014)[1]
இயக்க வருமானம்€150 மில். (2014)[1]
மொத்தச் சொத்துகள்€6.494 பில். (2014)[1]
மொத்த பங்குத்தொகை€2.659 பில். (2014)[1]
பணியாளர்4,989 (2014)[1]
இணையத்தளம்www.neste.com
யெஸ்ப்பூவில் அமைந்துள்ள நெஸ்டி நிறுவனத்தின் தலைமையகம்

நெஸ்டி (Neste) என்பது ஓர் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகும். இதன் விற்பனை நிறுவனம் பின்லாந்தின் யெஸ்ப்பூ நகரில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய கிளை சிங்கப்பூரில் உள்ளது. இது திரவ எரிபொருள்களையும் தயாரிக்கிறது.

எண்ணெய்ப் பொருட்களை தயாரித்து, சுத்திகரித்து விற்கிறது. பெற்றோல், டீசல், வானூர்தி எரிபொருள், கப்பல் எரிபொருள், சூடாக்கும் எண்ணெய்கள், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு ஆகியவற்றைத் தயாரிக்கிறது.

பின்லாந்தில் 900 சேவை நிலையங்களையும், பிற நாடுகளில் 240 சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. இந்நிறுவனம் பல அறிவுசார் சொத்துரிமைப் பத்திரங்களைப் பெற்றுள்ளது.

2010 இல், சிங்கப்பூரில் டீசல் தயாரிப்பு நிலையத்தை நிறுவியது. ஆண்டுதோறும் 800,000 டன்களை தயாரித்து உலகின் பெரிய நிறுவனம் என்ற பெருமைக்குரியது.

வெளியிணைப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Financial Statement 2014" (PDF). Neste Oil. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெஸ்டி&oldid=3561167" இலிருந்து மீள்விக்கப்பட்டது