நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2015 பெப்ரவர் 8 அன்று தொடுபுழாவில் நடைபெற்ற ஸ்ரீ மூகாம்பிகா மகாத்மிய கதகளி விழாவில் கம்சனாக நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி

நெள்ளியோடு வாசுதேவன் நம்பூதிரி (Nelliyode Vasudevan Namboodiri, பிப்ரவரி 5, 1940 – ஆகத்து 2, 2021)[1] ஒரு கதகளி கலைஞர் ஆவார். தென்னிந்தியாவின் கேரளாவிலிருந்து பாரம்பரிய கதகளி நடன-நாடகத்தின் "தீய சுவன்னா தாடி" ("சிவப்பு தாடி") பாத்திரங்களை இவர் துடிப்பாக சித்தரித்ததற்காக முதன்மையாகக் குறிப்பிட்டார்.

தொழில்[தொகு]

இவர், 1940 இல் எர்ணாகுளம் மாவட்டத்தில் சேரநல்லூர் என்ற ஊரில் பிறந்தார். இவர் 1957இல் கோட்டக்கல்லில் உள்ள பி.எஸ்.வி நாட்டியச் சங்கத்தில் சேர்ந்து, பத்மசிறீ வழெங்கடா குஞ்சு நாயரின் கீழ் பயிற்சி பெற்றார். [2] கேரளாவின் கலாமண்டலத்தில் கற்பித்தல் படிப்புக்குப் பிறகு, [3] திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய உயர்நிலைப் பள்ளியில் கதகளி ஆசிரியராக சேர்ந்தார். தற்போது திருவனந்தபுரம் அருகே பூஜாப்புரத்தில் வசிக்கிறார். [1]

விருதுகள்[தொகு]

இவர், சங்கீத நாடக அகாதமி, கேரள சங்கீத நாடக அகாடமி ஆகியவற்றிலிருந்து விருதுகளைப் பெற்றுள்ளார். 1976ஆம் ஆண்டில் ரிகட்டாவின் 'நாட்டியரத்னா' பட்டமும் தங்கப் பதக்கமும், 1988இல் துளசீவானா விருதும், கலாமண்டலம் விருதும், மத்திய அரசின் உதவித் தொகையும், ஓனமதுருத் கோயிலின் 'நாட்டியவிசராத்' பட்டமும் [1] 2013ஆம் ஆண்டுக்கான கேரள மாநில கதகளி பரிசும் பெற்றுள்ளார். [4]

தொழில்[தொகு]

கதகளியில், இவர் முதன்மையாக காளி, திரிகரத்தன், துச்சாதனன், பாகாசுரன், [5] வீரபத்ரன் போன்ற கொடூரமான கதாபாத்திரங்களில் நடித்தார். [6] (சுதாமா) நக்ரதுண்டி, சிம்ஹிகா, சூர்ப்பணகை, இலங்கா லட்சுமி, கறுப்பு-தாடி கொண்ட காட்டாளன் போன்ற பேய் வேடங்களைத் தவிர குசேலன் போன்ற புனிதமான வேடங்களிலும் இவர் சிறந்து விளங்குகிறார். சமசுகிருதத்திலும், இந்து மத புராணங்களிலும் ஆழமான அறிவைப் பெற்றுள்ளார். [7] கோயில் கலையான படாகம் எனும் கதை சொல்வதிலும் இவர் திறமையானவர். [8] வில்லியம் சேக்சுபியரின் சோக நாடகமான கிங்லியரில் பைத்தியக்காரத்தனமான பாத்திரத்தை வகித்துள்ளார். [9]

முக்கியத்துவம்[தொகு]

கதகளியில் கொடூரமான தாமச குணம் கொண்ட கதாபாத்திரங்களின் முன்னணிக் கலைஞராக நெல்லியோடு கருதப்படுகிறார். [4][5] இந்த கதாபாத்திரங்களின் ஆழமான விளக்கத்தை இவர் முன்வைத்துள்ளா. மேலும், நாடகங்களில் அவற்றின் முக்கிய பங்கையும் வலியுறுத்தினார். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Nelliyodu Vasudevan Namboodiri". Kathakali Artists. CyberKerala.
  2. "Matchless artistry". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article2273811.ece. 
  3. Dance World - Volume 6. https://books.google.com/books?id=NIwkAQAAIAAJ. 
  4. 4.0 4.1 "An inspired genius in fierce red". Kerala Tourism. Government of Kerala, Dept. of Tourism. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
  5. 5.0 5.1 Asian Theatre Journal: ATJ. - Volumes 21-22. பக். 229. https://books.google.com/books?id=q2IqAQAAIAAJ. 
  6. "Fine improvisation". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/fine-improvisation/article658958.ece. 
  7. 7.0 7.1 "Matchless artistry". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article2273811.ece. Kaladharan, V. (28 September 2007). "Matchless artistry". The Hindu.
  8. "In a new role". http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/in-a-new-role/article3217576.ece. 
  9. Critical Theory and Performance. பக். 127. https://books.google.com/books?isbn=0472068865.