நெல் வயல் எலி
நெல் வயல் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரேட்டசு
|
இனம்: | ரே. அர்ஜெண்டிவெண்டர்
|
இருசொற் பெயரீடு | |
ரேட்டசு அர்ஜெண்டிவெண்டர் (இராபின்சன் & கிளாசு, 1916) | |
நெல் வயல் எலி (Ricefield rat-ரேட்டசு அர்ஜெண்டிவெண்டர்) என்பது தென்கிழக்காசியா முழுவதும் காணப்படும் ஓர் எலி சிற்றினமாகும்.
விளக்கம்
[தொகு]நெல் வயல் எலி ஒரு நடுத்தர அளவிலான எலியாகு. இது பச்சை மஞ்சள்-பழுப்பு மற்றும் கருப்பு நிற உரோமங்கள் உடல் முழுவதும் காணப்படும். இதன் வயிற்றின் நடுப்பகுதியில் சாம்பல் நிறத்தில் வெள்ளை விலா மடிப்புடன் காணப்படும். இவை உளி போன்ற வெட்டுப்பல்லினைக் கொண்டுள்ளன. நெல் வயல் எலியின் உடல் நீளம் 304 முதல் 400 மி.மீ. இதில் வால நீளம் 140 முதல் 200 மி.மீ. ஆகும். மண்டையோட்டின் நீளம் 37 முதல் 41 மி.மீ. ஆகும். இதனுடைய சராசரி எடை 97 முதல் 219 கிராம் ஆகும். பெண் எலி 12 பால்மடிகளைக் கொண்டுள்ளது.
நடத்தை
[தொகு]நெல் வயல் எலி ஒரு மேலாதிக்க ஆண் மற்றும் பெண் கொண்ட பெரிய குழுக்களாக வாழ்கிறது. தாக்கப்பட்டாலோ அல்லது தொந்தரவு செய்யப்பட்டாலோ இவை சத்தம் உடும். ரேட்டசு அர்ஜென்டிவென்டரின் உணவில் முக்கியமானவையாகக் கரையான், பூச்சி, வெட்டுக்கிளி, நத்தை, விதைகள், கொட்டைகள், அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளன. இவை இரவில் உணவு சேகரிக்கின்றன. அந்தி மற்றும் விடியற்காலையில் தீவிரமாகச் செயல்படும். இவை தாவரங்கள், களைகள் அல்லது முதிர்ந்த வயல்களில் காணப்படுகின்றன. இது 3 வாரக் கர்ப்பத்திற்குப் பின் ஒரு முறை 5 முதல் 10 குட்டிகளைப் பெற்றெடுக்கிறது.
வாழ்விடம்
[தொகு]தென்கிழக்காசியா முழுவதும் நெல் வயல் பகுதியில் இந்தோசீனா பிராந்தியம், தாய்லாந்து, தீபகற்ப மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பீன்சு மற்றும் நியூ கினி ஆகிய நாடுகளில் முக்கிய கொறிணியாக உள்ளன.
கம்போடியாவில் மனித உணவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் இந்த எலிகள் வியட்நாமிற்கு ஏற்றுமதிச் செய்யப்படுகின்றன.[2] சூன் மற்றும் சூலை மாதங்களில் நெல் அறுவடைக்குப் பிறகு இந்த எலிகள் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. இதன் உணவுப் பற்றாக்குறைக் காலம் பருவகால மழையுடன் ஒத்துப்போகிறது. எனவே கொறிணிகள் தரையின் மேற்பகுதிக்கு இறை தேட உந்தப்படுகின்றன. இங்கு இவற்றைப் பொறிகள் வைத்துப் பிடிக்கின்றன.
ஒட்டுண்ணிகள்
[தொகு]நெல் வயல் எலியின் ஒட்டுண்ணியாக இசுகிசுடோசோமா இசுபிண்டேல் உள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruedas, L.; Aplin, K.; Lunde, D. (2008). "Rattus argentiventer". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/19322/0. பார்த்த நாள்: 1 January 2009. Database entry includes a brief justification of why this species is of least concern
- ↑ Doyle, Kevin (24 August 2014). "Cambodian rat meat: A growing export market" – via www.bbc.com.
- ↑ Inder Singh, K.; Krishnasamy, M.; Ambu, S.; Rasul, R.; Chong, N. L. (1997). "Studies on animal schistosomes in Peninsular Malaysia: Record of naturally infected animals and additional hosts of Schistosoma spindale". The Southeast Asian journal of tropical medicine and public health 28 (2): 303–307. பப்மெட்:9444010.
- Junaidi, P.; F.M.Charlesl; & P.Karen. (1985). A Field Guide To The Mammals Of Borneo. The Sabah Society.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Rattus argentiventer தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.