நெல்லி சேத்னா
நெல்லி சேத்னா | |
|---|---|
| பிறப்பு | நெல்லி மேத்தா 1 நவம்பர் 1932 மும்பை, பம்பாய் மாகாணம் |
| இறப்பு | 1992 |
| படித்த கல்வி நிறுவனங்கள் | ரீஜண்ட் ஸ்ட்ரீட் பாலிடெக்னிக் கிரான்புரூக் கலை அகாடமி |
| அறியப்படுவது | ஆடை வடிவமைப்பு |
| வாழ்க்கைத் துணை | ஹோமி தரப் சேத்னா |
| விருதுகள் | பத்மசிறீ (1985) |
நெல்லி ஹோமி சேத்னா (Nelly Homi Sethna ) ஒரு இந்திய நெசவாளரும், ஆடை வடிவமைப்பாளரும், ஆராய்ச்சியாளரும், எழுத்தாளரும் மற்றும் கைவினை ஆர்வலரும் ஆவார்.[1] இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடிமை விருதான பத்மசிறீ விருது பெற்றவர்.இவர் ஸ்காண்டினேவிய நவீனத்துவம் மற்றும் இந்திய கைவினை பாரம்பரியத்தின் குறுக்கு வழியில் பணியாற்றினார். இது இவரது வழிகாட்டும் தத்துவத்தை வடிவமைத்தது.[2] கமலாதேவி சட்டோபாத்யாய் உடனான இவரது நெருங்கிய தொடர்பு பாரம்பரிய இந்திய கைவினைகளின் மறுமலர்ச்சி மற்றும் ஊக்குவிப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.[3]
பிறப்பு
[தொகு]1932 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதி இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பிறந்தார். பெஸ்டோன்ஜி மற்றும் கூல்பானு மேத்தாவின் மகள்.[4]
படிப்பு
[தொகு]நெல்லி மும்பையில் உள்ள சர் ஜே. ஜே. கலைப் பள்ளியில் வணிகக் கலைப் பிரிவில் சேர்ந்தார்.பின்னர் ரீஜண்ட் ஸ்ட்ரீட் பாலிடெக்னிக்கில் (இப்போது, வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம்) ஜவுளி வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் படிக்க 1954 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கே கை எம்பிராய்டரி ,ஜவுளி வடிவமைப்பு, துணி வடிவமைப்பு மற்றும் அச்சிடல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று பரிசுகள் வென்றார். 1956 இல் தனது டிப்ளோமாவை முடித்தார்.[5] ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் உள்ள ஒரு கிராஃபிக் ஸ்டுடியோவில் ஒரு வருடம் பணியாற்றிய பிறகு, நெல்லி 1957 இல் வீடு திரும்பினார்.[6]
தொழில் மற்றும் தாக்கங்கள்
[தொகு]1957 ஆம் ஆண்டு சேத்னா இந்தியாவிற்கு வந்த பிறகு, நெவில் வாடியா அவரை பாம்பே டையிங்கில் உள்ள முதல் ஜவுளி வடிவமைப்பு ஸ்டுடியோவில் சேர அழைத்தார்.இந்தியா திரும்பியதும், சேத்னா பாம்பே டையிங் மற்றும் உற்பத்தியில் வடிவமைப்பு ஸ்டுடியோவின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். ஒட்டுமொத்தமாக, அவர் 1957 முதல் 1958 வரையிலும், பின்னர் 1960 முதல் 1968 வரையிலும் பாம்பே டையிங்கின் தலைமை ஜவுளி வடிவமைப்பாளராக பணியாற்றினார்.
கலைப் பங்களிப்பு
[தொகு]1966 ஆம் ஆண்டில், தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (என்ஐடி) இணை நிறுவனர் கிரா சாராபாய், சேத்னாவை அகமதாபாத்திற்கு அழைத்தார்.[1] அவருடன் நெல்லி மற்றும் தனது தோழி, பின்லாந்து ஜவுளி வடிவமைப்பாளர் ஹெலினா பெர்ஹீன்டுபாவுடன், இணைந்து என்ஐடி-யில் ஜவுளித் துறையை நிறுவ முக்கிய அடித்தளம் அமைத்தார்.[2]
கலம்காரி கலையின் மறுமலர்ச்சியில் பங்கு
[தொகு]1970 ஆம் ஆண்டு மசூலிப்பட்டினத்தில் உற்பத்தி செய்யப்படும் கலம்காரியின் ஜவுளிப் பொருட்களைப் பார்வையிட்டபோது அங்கே தயாரிக்கப்பட்ட படைப்புகளின் தரம் நேர்த்தியானதாக இல்லை என்பதைக் கண்டறிந்தார். ஹோமி பாபா பெல்லோஷிப்பின் ஆதரவுடன், சேத்னா கலம்காரி கலையைப் புத்துயிர் பெறச் செய்தார். ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் மசூலிப்பட்டினத்தில் 1972 மற்றும் 1974 க்கு இடையில், குறைந்து வந்த கலம்காரியின் கலை குறித்து விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டார்.[7]
விருதுகள்
[தொகு]1985 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு சேத்னா ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசாங்கத்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.[12]
இறப்பு
[தொகு]இவர் 1992 ஆம் ஆண்டு தனது 60 ஆவது வயதில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "The Unpaved, Crusty, Earthy Road | Nelly Sethna: A Retrospective, curated by Nancy Adajania". Chatterjee & Lal. Retrieved 2022-06-06.
- 1 2 "Tapestries of time: A portrait of Nelly Sethna". Architectural Digest India (in Indian English). 2021-09-08. Retrieved 2022-03-05.
- ↑ "10 Textile Artists You Should Know". India Art Fair. 2021-10-26. Retrieved 2022-03-25.
- ↑ Indian Who's Who 1980-81 (in English). New Delhi: INFA Publications. p. 99.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sethna, Nelly Homi (1932-1992), textile designer and alumna - University of Westminster › Records and Archives". westminster-atom.arkivum.net. Archived from the original on 9 March 2023. Retrieved 2022-06-21.
- ↑ "Untitled - Nelly Sethna | The Surya Collection: Property from Mrs. Ute Rettberg". Sotheby's. Retrieved 21 June 2022.
- ↑ Dalmia, Yashodhara (September 1978). "Note: Kalamkari: Transformation by Nelly Sethna". Marg - Homage to Kalamkari 31 (4): 81–88. https://marg-art.org/product/UHJvZHVjdDozNDE1.
