நெல்லியடி மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெல்லியடி மத்திய கல்லூரி
Nelliady Central College
நெல்லியடி ம. க. சின்னம்.png
முகவரி
நெல்லியடி மத்திய மகா வித்தியாலய வீதி
நெல்லியடி, இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்அறிவு ஒளிர, சால்பு சிறக்க!
நிறுவல்1921
முதல்வர்செல்லத்துரை சேதுராசா
தரங்கள்6-13
பால்ஆண், பெண்
மொழிதமிழ், ஆங்கிலம்
Publicationசிந்தனை
Yearbookநெல்லிக்கனி
இணையம்

நெல்லியடி மத்திய கல்லூரி (Nelliady Central College) (முன்பு, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் (Nelliady Madhya Maha Vidyalayam)) யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல்லியடியில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இது இலங்கையின் தேசியப் பாடசாலைகளுள் ஒன்றாகும்.

ஆரம்பம்[தொகு]

நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் 1921ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

வரலாறு[தொகு]

1946ஆம் ஆண்டில் இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கராவினால் 54 பாடசாலைகள் மத்திய மகா வித்தியாலயங்களாகத் தரமுயர்த்தப்பட்டன. அவற்றுள் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் ஒன்றாகும்.[1] பின்னர், அக்டோபர் 6, 2011இலிருந்து இக்கல்லூரியானது தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[2]

கல்லூரிப்பண்[தொகு]

"வாழ்க வாழ்க வாழ்கவே..." இயற்றியவர பண்டிதர் க. வீரகத்தி

       பல்லவி

வாழ்க வாழ்க வாழ்கவே எங்கள் கலைக் கோயிலென்றும் வாழ்க வாழ்க வாழ்கவே

      அனுபல்லவி

நெல்லியடி மத்தியகல்லூரியாலயம் நிகரில்லாத கலையினூற்று குருகுலபீடம்

       சரணம்

கண்விழித்த கமலமன்னர்

கவர்ச்சிபொங்கும் பார்வையும்

மெள்ள மெள்ள சொரிந்து நிற்கும்

மேன்மைமிக்க குரவர்கள்

செல்வமென்று போற்றுமெங்கள்

உயிரில்வாழும் செந்தமிழ்

அல்லல் நீக்கி ஆடசிகாண

அருள் வழங்கும் வாணியாய்

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]