உள்ளடக்கத்துக்குச் செல்

நெல்லிக்குளங்கரை பகவதி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெல்லிக்குளங்கரை பகவதி கோவில் என்பது தென் இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் நெம்மாறை என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோவிலாகும். இந்தக் கோவிலில் அமர்ந்து அருள் பாலிக்கும் இறைவி நெல்லிக்குளங்கரை பகவதி ஆவார்.

ஒவ்வொரு ஆண்டும் மீன மாதம் 20 ஆம் நாள் (மார்ச்-ஏப்ரல்) இக்கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் நெம்மாறை மற்றும் வல்லங்கி கிராமத்து மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இந்த உற்சவத்தை நெம்மாறை வல்லங்கி வேளை என்று அழைக்கின்றனர்.