நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு ஓசூரம்மன் கோவில்
ஓசூரம்மன்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கடலூர் -பண்ருட்டி மெயின் ரோடு, நெல்லிக்குப்பம், பண்ருட்டி வட்டம்[1][2]
சட்டமன்றத் தொகுதி:பண்ருட்டி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
தாயார்:ஓசூரம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:பங்குனி மாத 10 நாள் பிரம்மோற்சவம்
வரலாறு
கட்டிய நாள்:பதினாறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நெல்லிக்குப்பம் ஓசூரம்மன் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் , கீழ்பட்டாம்பாக்கம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் ஓசூரம்மன் கருவறை சன்னதியும், குபேர விநாயகர், பாலமுருகன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் முன் மண்டபம், மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் , கருவறை விமானம் ஆகியவை உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

மேலும், பேச்சு அம்மன், ஆசிர்வாத ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை, தர்மசாஸ்தா(அய்யப்பன்), இடும்பேஸ்வரன், அருள்மிகு காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், நவகிரக மூர்த்தங்கள் போன்ற உபசன்னதிகள் உள்ளன . இலக்குவன், சீதை சமேத கோதண்டராமர் தனிக் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதத்தில் பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. இந்த விழா பத்து

சமூகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டாலும் அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டு பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் விழா அதிகாலையில் கொடியேற்றம் செய்து, அம்மன் தன்தாய் வீடான வெள்ளப்பாக்கம் கிராமத்தில் உற்சவம் நடத்தப்படுகிறது. இது வெள்ளப்பாக்கம் கிராம வாசிகளால் நடத்தப்படுகிறது. இரண்டாம்நாள் விழா ஆயிர வைசிய சமூகத்தினராலும், மூன்றாம் நாள் விழா ஆரிய வைசிய சமூகத்தாராலும் நடத்தப்படுகிறது. முதல் நாள் பல்லக்கும், இரண்டாம் நாள் பூத வாகனம், மூன்றாம் நாள் சிம்ம வாகனம் ஆகியவற்றில் அம்மன் இரவு வீதிஉலா வருவார் . நான்காம் நாள் உற்சவம் வன்னிய சமுதாயத்தினர் நடத்தப்படுவது.[4] நான்காம் நாள் நாக வாகனத்தில்[5][6] அரங்கநாயகி உடனுறை அரங்கநாதர் அலங்காரத்தில் அம்மன் இரவு வீதிஉலா வருவார். ஐந்தாம் நாள் அம்மன் அன்ன வாகனத்திலும் விநாயகரும் முருகரும் இரவு வீதிஉலா வருவார். ஐந்தாம் நாள் உற்சவம் துளுவ வேளாளர் சமுகத்தாரால் நடத்தப்படுகிறது. ஆறாம் நாள் யானை வாகனத்தில் அன்னபூரணி அலங்காரத்தில் அம்மன் இரவு வீதிஉலா வருவார் . இது பிராமண சமூகத்தினர் நடத்தும் உற்சவம். ஏழாம் நாள் தெருவடைத்தான் உற்சவம் விஸ்வகர்மா சமுதாயத்தினர் நடத்துவது. எட்டாம் நாள் வெட்டுங்குதிரை வாகனம் இது வாணிய வைசிய சமூகத்தினரால் நடத்தப்படுவது. ஒன்பதாம் நாள் திருத்தேர் ரெட்டியார் சமூகத்தினரால் நடத்தப்படும் உற்சவம். பத்தாம் நாள் நாயுடு சமூகத்தினர் நடத்தும் தெப்பல் உற்சவத்தில் [7] இராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் இரவு வீதிஉலா வருவார். பதினொன்றாம் நாள் காலை கொடிஇறக்கம் செய்யப்பட்டு, மாலை உற்சவம் சலவை தொழிலாளர் சமூகத்திற்கு உரியது. அது மஞ்சள் நீர் உற்சவம். இப்படி 11 நாட்கள் பிரமோற்சவம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. இது மட்டுமல்லாமல் ஆடியில் அம்மனுக்கு சாகை வார்த்தல், ஆடிப்பூரம், ஆற்றுத் திருவிழாவும் முக்கிய திருவிழா ஆகும்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "ஓசூரம்மன் திருக்கோவில் அமைவிடம் -Google Maps". Google Maps. பார்க்கப்பட்ட நாள் 2021-11-17.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "நான்காம் நாள் விழா, தினமலர்". தினமலர்.
  5. "ஓசூரம்மன் கோவிலில் அஸ்வமேத யாகம்". Dinamalar. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  6. "ஓசூரம்மன் கோவிலில் கஜ பூஜை!". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
  7. "பத்தாம் நாள் விழா, தினமலர்". தினமலர்.