நெல்கா சிரோமலா
| தனிநபர் தகவல் | |
|---|---|
| பிறப்பு | 22 சனவரி 1976 |
| கல்வி | ரிப்பன் பெண்கள் கல்லூரி, காலி |
| விளையாட்டு | |
| விளையாட்டு | குறி பார்த்துச் சுடுதல் குத்துச்சண்டை |
நெல்கா சிரோமலா (Nelka Shiromala) தம்பு நெல்கா சிரோமலா என்றும் அழைக்கப்பட்டார்.[1] 1976 ஆம் ஆண்டு, 22 ஜனவரி மாதம், 22 ஆம் நாள் பிறந்தார். சிரோமலா இலங்கை ஒரு காவல்துறை அதிகாரியாக ஆவார். இவர் முன்னாள் தேசிய குத்துச்சண்டை வீரர் ஆவார் மற்றும் குத்துச்சண்டை நடுவராகவும் இருந்து வந்தார்.[1][2] நெல்கா இலங்கையின் முதல் பெண் குத்துச்சண்டை நடுவராக ஆவார். இவர் பல உள்ளூர் மற்றும் சர்வதேசக் குத்துச்சண்டைப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். 2020 ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கில் குத்துச்சண்டைப் போட்டிக்கான நடுவர்களில் ஒருவராகச் சர்வதேச ஒலிம்பிக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2000 ஆம் ஆண்டில் இலங்கையில் பெண்கள் குத்துச்சண்டை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் ஆரம்பக்கால முன்னோடியாக விளங்கினார். குத்துச்சண்டை அரங்கில் "வளையத்தின் ராணி" என்று செல்லமாக அனைவராலும் அழைக்கப்பெற்றார்.[4]
வாழ்க்கை வரலாறு
[தொகு]நெல்கா சிரோமலா தனது குடும்பத்தில் மூத்த குழந்தையாகப் பிறந்தார், இவருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர். இவர் ஒரு தமிழ்த் தந்தைக்கும் மற்றும் சிங்களத் தாய்க்குப் பிறந்தவர் ஆவார். இவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியை இலங்கையின், ப்ப்காலி]]யில் உள்ள ரிப்பன் பெண்கள் கல்லூரியில் பயின்றார். இவரது தந்தை தம்பு சம்பத் ஒரு குத்துச்சண்டை வீரர் ஆவார். மேலும் இலங்கை கடற்படையில் குத்துச்சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்தார். நெல்கா சிரோமலா இலங்கைக் காவல்துறையிலும் பணியாற்றிய போது, உடன் பணிபுரிந்த சந்தன விக்ரமநாயக்கா என்பவரை மணந்தார்.[4] நெல்காவின் தந்தை 2021 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் பாரிஸில் நடந்த ஐரோப்பிய ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் அதிகாரியாகப் பணியாற்றியபோது மாரடைப்பால் காலமானார்.[4]
தொழில் மற்றும் வாழ்க்கை
[தொகு]நெல்கா சிரோமலா 1997 ஆம் ஆண்டு இலங்கை காவல்துறையில் பயிற்சித் துணை ஆய்வாளராகச் சேர்ந்து பணியாற்றினார். இலங்கையின் வட மாகாணத்தில் நிலவிய உள்நாட்டு உச்சக்கட்ட போரின் போது, இலங்கை காவல்துறையில் தனது முதலாம் ஆண்டில் வவுனியாவிற்கு மாற்றப்பட்டார்.[5] இலங்கை காவல்துறையில் சேர்ந்த பிறகு துப்பாக்கிச் சூட்டில் சிறந்து விளங்கினார். 1997 ஆம் மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் பிஸ்டல் துப்பாக்கிச் சூடு பிரிவில் சிறந்த போலீஸ் துப்பாக்கி சுடும் வீரராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தையின் ஆலோசனை மற்றும் ஊக்கத்திற்குப் பிறகு, 2001 ஆம் ஆண்டில் குத்துச்சண்டையில் தனது வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தார்.[5] நெல்கா சிரோமலாவுக்கு முதல் குத்துச்சண்டைப் பயிற்சியாளர் அவரின் தந்தையே ஆவார்.[6]
2002 ஆண்டு முதல் 2006 ஆண்டு வரை இலங்கை காவல்துறை குத்துச்சண்டை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது, துப்பாக்கிச் சூட்டுடன் கூடுதலாகக் குத்துச்சண்டையிலும் தேர்ச்சி பெற்றார்.[7] இவர் இலங்கையின் முதல் பெண் காவல்துறை குத்துச்சண்டை வீரர் ஆனார். சர்வதேசக் குத்துச்சண்டைப் போட்டிகளில் பங்கேற்ற முதல் இலங்கைப் பெண் காவல்துறை அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார்.[7] தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் குத்துச்சண்டை தேசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
ஐ.நா.வின் அமைதி காக்கும் வீரராக செனகலின் டாக்கரில் சிறிது காலம் பணியாற்றினார்.[4] பின்னர் இவர் 2009 இல் குத்துச்சண்டை நடுவராகப் பணியாற்றினார், மேலும் 2011 ஆண்டில் நிலை I குத்துச்சண்டை நடுவராக உயர்த்தார். 2011 ஆண்டில் இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவர் கோப்பையில் சர்வதேச அளவில் குத்துச்சண்டை நடுவராக அறிமுகமானார் மேலும் சர்வதேச அளவில் நடுவராகப் பணியாற்றிய முதல் இலங்கைப் பெண் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஆவார்.[8] இவர் 2011 ஆண்டில் ஒலிம்பிக் சோதனை நிகழ்விலும் நடுவராகப் பணியாற்றினார், மேலும் லண்டன் ஒலிம்பிக் சோதனைகளின் போது சர்வதேச நடுவராகப் பணியாற்றிய ஆறு மாதங்களுக்குள் நிலை II நடுவராகப் பதவி உயர்வு பெற்றார்.
2013 ஆம் ஆண்டில் தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் முதல் பெண் 3-நட்சத்திர நடுவராக ஆனார்.[9] தற்போது இவர் இலங்கையின் ஒரே 3-நட்சத்திரப் பெண் குத்துச்சண்டை அதிகாரியாக விளங்கி வருகிறார். தென் கொரியாவில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு மகளிர் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இவர் பணியாற்றி உள்ளார். தாய்லாந்தில் நடந்த 2015 ஆம் ஆண்டு ஆசிய மகளிர் அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது ஒரே பெண் நடுவராகவும் நெல்கா சிரோமலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உலக தொடர் குத்துச்சண்டை நடுவராகவும் தகுதி அடைந்தார்.[5]
2017 ஆம் ஆண்டில் ஆசியக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பிலிருந்து சிறந்த நடுவர் விருதை நெல்கா சிரோமலா பெற்றார். மேலும் இந்த விருதைப் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை அடைந்தார்.[10] 2018 ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2019 ஆம் ஆண்டில் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடுவராகவும் நெல்கா சிரோமலா தேர்ந்தெடுக்கப்பட்டார். கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய முதல் இலங்கைக் குத்துச்சண்டை நடுவர் என்ற பெருமையை நெல்கா சிரோமலா பெற்றார்..[11][12]
2020 தோக்கியோ ஒலிம்பிக்கின் நடுவராகப் பணியாற்றினார் இதில் இவரே முதல் இலங்கைப் பெண் குத்துச்சண்டை நடுவராக ஆவார்.[13][14] 2020 ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆண்கள் லைட் ஹெவிவெயிட் இறுதிப் போட்டியிலும், பெண்கள் லைட்வெயிட் இறுதிப் போட்டியிலும் நடுவராகப் பணியாற்றினார். ஒலிம்பிக்கில் இரண்டு குத்துச்சண்டை நிகழ்வு இறுதிப் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றிய முதல் இலங்கைக் குத்துச்சண்டை நடுவராகவும் இவரே ஆவார்.[15] தர்மசிறி வீரகோன் என்பவருக்குப் பிறகு ஒலிம்பிக்கில் நடுவராகப் பணியாற்றிய இரண்டாவது இலங்கைக் குத்துச்சண்டை நடுவராகவும் ஆனார்.[4] தற்போது கொள்ளுப்பிட்டி என்ற காவல் நிலையத்தில் தலைமை ஆய்வாளராக நெல்கா சிரோமலா பணியாற்றி வருகின்றார்.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "BoxRec: Nelka Shiromala Thampu". boxrec.com. Retrieved 2021-07-26.
- ↑ "Boxing - THAMPU Nelka Shiromala". Tokyo 2020 Olympics (in அமெரிக்க ஆங்கிலம்). Tokyo Organising Committee of the Olympic and Paralympic Games. Archived from the original on 26 July 2021. Retrieved 2021-07-26.
- ↑ Seneviratne, Akhila (2021-07-19). "Lankan lass to make history in the Olympics Boxing ring". ThePapare.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "Sri Lanka's Queen of the Ring on threshold of history". Sunday Observer (in ஆங்கிலம்). 2021-07-17. Retrieved 2021-07-26.
- ↑ 5.0 5.1 5.2 "Nelka, living her father's dream". Print Edition - The Sunday Times, Sri Lanka. Retrieved 2021-07-26.
- ↑ "A father's love in a boxing glove". Sunday Observer (in ஆங்கிலம்). 2021-06-18. Retrieved 2021-07-26.
- ↑ 7.0 7.1 Weerasooriya, Sahan. "Lanka female Police officer selected as Olympics boxing judge" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ "Local boxer becomes first Sri Lankan female to judge Olympic event". adaderana.lk (in ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ "Ms Nelka Shiromala – AIBA 3 Star WSB R&J | Sri Lanka Boxing Association" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ "Asia's best R&J in 2017 Mrs. Nelka Shiromala – I never had any expectations to receive any awards". ASBCNEWS (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ 11.0 11.1 "Police officer Nelka Shiromala, first Lankan lady referee at Commonwealth Games ring". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ Ratnayake, Leonard (2018-03-28). "Nelka Shiromala, first Lankan lady referee at Commonwealth Games". srilankasports.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ Amath, Sherifdeen. "Woman boxing judge and referee Nelka Shiromala to officiate at Tokyo Olympics". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ Premach, Jagath; ra (2021-07-21). "ඔලිම්පික් ගිය පොලිස් බොක්සිං රැජිණ "නෙල්කා"". ThePapare.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-07-26.
- ↑ Ratnaweera, Dhammika. "Nelka Shiromala creates boxing history by officiating two Olympic finals". Daily News (in ஆங்கிலம்). Retrieved 2021-08-17.