நெலவலா விஜயசிறீ
நெலவலா விஜயசிறீ | |
|---|---|
| ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | கிளிவேட்டி சஞ்சீவையா |
| தொகுதி | சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி |
நெலவாலா விஜயசிறீ (Nelavala Vijayasree-பிறப்பு 1987) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திருப்பதி மாவட்டத்தில் உள்ள பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியினைச் சார்ந்தவர். 2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
கல்வி
[தொகு]விஜயசிறீ நெல்லூரைச் சேர்ந்தவர். டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நெல்லூரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரியில் 2022ஆம் ஆண்டு இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் கல்வியினை முடித்தார்.[2][3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2024 ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சூலூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு விஜயசிறீ வெற்றி பெற்றார்.[3][4] இவர் 1,11,048 வாக்குகளைப் பெற்று, ஒய். எஸ். ஆர். காங்கிரசு கட்சியின் கிளிவேட்டி சஞ்சீவையாவை 29,115 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sullurpeta, Andhra Pradesh Assembly Election Results 2024 Highlights: TDP's Nelavala Vijayasree wins Sullurpeta with 111048 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Nelavala Vijayasree(TDP):Constituency- SULLURPETA (SC)(NELLORE) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-05.
- ↑ 3.0 3.1 "Nelavala Vijayasree, TDP Candidate from Sullurpeta Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ 4.0 4.1 "Andhra Pradesh Assembly elections 2024: Complete list of NDA candidates - CNBC TV18". CNBCTV18 (in ஆங்கிலம்). 2024-05-08. Retrieved 2024-06-05.
- ↑ "Sullurpeta (SC) Constituency Election Results 2024: Sullurpeta (SC) Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.