நெலமங்கலம்
நெலமங்கலம்
ನೆಲಮಂಗಲ | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 13°06′07″N 77°22′26″E / 13.102°N 77.374°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் ஊரகம் |
அரசு | |
• வகை | நகரமன்றம் |
• நிர்வாகம் | நெலமங்களம் நகராட்சி |
• சட்டமன்ற உறுப்பினர் | கே. சீனிவாசமூர்த்தி (ஜனதா தளம்) |
பரப்பளவு | |
• நகரம் | 507 km2 (196 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 3 |
ஏற்றம் | 882 m (2,894 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• நகரம் | 2,10,889 |
• மதிப்பீடு (2021) | 2,45,624 |
• தரவரிசை | மக்கள் தொகையில் பெங்களூர் ஊரக மாவட்டத்தில் மூன்றாவது பெரிய நகரம் |
• அடர்த்தி | 415.95/km2 (1,077.3/sq mi) |
• நகர்ப்புறம் | 47,799 |
• நாட்டுப்புறம் | 1,63,090 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 562 123 |
தொலைபேசி குறியீடு | 08118 |
வாகனப் பதிவு | KA-52 |
நெலமங்கலம் (Nelamangala) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூர் கிராமப்புற மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இது நெலமங்கலம் வட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. நெலமங்கலம் ஊரானது இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளான, தே. நெ.-75(48) ( பெங்களூரு - மங்களூர் ) மற்றும் தே.நெ.-4 ( மும்பை - சென்னை) ஆகியவை பெங்களூர் நகருக்கு வடக்கே) சந்திக்கும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
நிலவியல்
[தொகு]நெலமங்கலம் வட்டம் 507 கிமீ 2 . பரப்புக்கு பரவியுள்ளது இது 13°05′N 77°23′E / 13.09°N 77.39°E இல் அமைந்துள்ளது.[2]
மக்கள்தொகையியல்
[தொகு]2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நெலமங்கலத்தின் மக்கள் தொகை 37,232 ஆகும். இதில் 18,840 பேர் ஆண்களும், 18,392 பேர் பெண்களும் ஆடங்குவர். நெலமங்களத்தின் கல்வியறிவு விகிதம் 89.65% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 93.27% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 85.97% ஆகவும் உள்ளது.
வேலைவாய்ப்பு விவரம்
[தொகு]மொத்த மக்கள்தொகையில், 14,600 பேர் ஏதோவொரு வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களாக உள்ளனர். வேலைக்குப் போகுப்போவோரில் 11,118 பேர் ஆண்கள், 3,482 பேர் பெண்களாவர். மக்கள்தொகை கணக்கெடுப்பில், இங்குள்ள தொழிலாளர்களில் வணிகம், வேலை, சேவை மற்றும் தொழிலாளர்களாக இருப்பவர்கள் என வரையறுக்கப்படுகிறார்கள். மொத்த உழைக்கும் மக்களான 14,600 பேரில் 91.54% பேர் குறிப்பிடத்தக்க வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், மொத்த தொழிலாளர்களில் 8.46% பேர் விளிம்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நெலமங்கலத்தைச் சுற்றியுள்ள குறிப்பிடத்தக்க இடங்கள்
[தொகு]நெலமங்கலம் தும்கூர் மற்றும் மும்பை நோக்கி செல்லும் தே.நெ -4 இல், பெங்களூர் நகரத்திலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தென்மேற்கு இரயில்வேயின் முதல் ரோல் ஆன் ரோல் ஆஃப் சேவையானது நெலமங்கலம் நகரத்திலிருந்து மகாராட்டிரத்தின் பேல் வரை தொடங்கப்பட்டது. இந்திய இரயில்வேயில் தனியாரால் இயக்கப்படும் ஒரே ரோரோ சேவையாக இது அங்கீகரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
- ↑ "Nelamangala". பார்க்கப்பட்ட நாள் 2011-04-07.