உள்ளடக்கத்துக்குச் செல்

நெறிபிறழ்வு (உளவியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெறிபிறழ்வு (perversion) என்பது இயல்பான பாலியல் செயற்பாடுகளுக்கு பிறழ்வான என்றவகையில் வழங்கப்பட்டு வருகின்றது. இது உளவியல் நோக்கில் பாலியல் தொடர்பான வேட்கைகளைக் (sexual desires) குறிப்பதாகும். இதன் அடிப்படையிலேயே மோகத்திரிபுகள் (pervertions) ஏற்படுகின்றன என்பர் அறிஞர். இவ்வாறான மோகம் என்பது பல நிலைகளில் அழைக்கப்பட்டு வருகின்றன. அவை, காட்சிமோகம் (exibitionism), பார்வைமோகம் (voyerism), சார்பொருள்மோகம் (fetishism), தன்மோகம் (narcissism) என்பனவாகும். பிறரைக் காமநோக்கில் பார்த்து இன்புறுவது பார்வைமோகம் எனப்படும். தன் அழகை, அங்கங்களைப் பிறருக்குக் காட்டுவது காட்சிமோகம். தன் காதலி, காதலன், பயன்படுத்திய பொருட்களைக் கண்டு காமுறுதல் சார்பொருள் மோகம். தன்னைத் தான் கண்டு தானே காமுறுதல், தன் அழகில் தானே மயங்குதல் தன்மோகம் எனப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெறிபிறழ்வு_(உளவியல்)&oldid=1773075" இலிருந்து மீள்விக்கப்பட்டது