நெர்கிசு மாவல்வலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெர்கிசு மாவல்வாலா (Nergis Mavalvalaபிறப்பு 1968) ஒரு பாக்கித்தான்-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார்.இவர் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (எம்ஐடி) வானியற்பியல் பிரிவின் பேராசியர் ஆவார். அங்குள்ள ஸ்கூல் ஆஃப் சயின்ஸின் இணை தலைவராகவும் உள்ளார்.[1]2010 ஆம் ஆண்டில் இவருக்கு மெக் ஆர்தர் ஃபெல்லோசிப் விருது வழங்கப்பட்டது.

மாவல்வாலா சீரொளி குறுக்கீட்டுமானி ஈர்ப்பலை ஆய்வகத் (LIGO) திட்டத்தில் ஈர்ப்பு அலைகளைக் கண்டறிந்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். [2] [3] [4] இவர் பிற இயற்பியல் சிக்கல்களுக்கான சில சிறப்பான முடிவுகளைக் கண்டறிந்தார்.உதாரணமாக, பேரியலான பொருட்களை சீரொளி மூலம் குளிரூட்டல் செயல்பாடு.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

மாவல்வாலா லாகூரில் பிறந்தார், ஆனால் பெரும்பான்மையாக பாகிஸ்தானின் கராச்சியில் வளர்ந்தார். [5] கராச்சியின் இயேசு மற்றும் மேரி மாடப்பள்ளியில் கல்வி கற்றார். இவர் 1986 இல் அமெரிக்கா சென்றார் மற்றும் வெல்லெஸ்லி கல்லூரியில் சேர்ந்தார், அங்கு இவர் 1990 இல் இயற்பியல் மற்றும் வானியலில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் இவர் எம்ஐடி இயற்பியல் துறையில் இராய்னர் வெய்சுவின் குழுவில் சேர்ந்தார், மேலும் 1997 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

பார்சி குடும்பத்தில் பிறந்த [6] மாவல்வாலா இரண்டு குழந்தைகளில் இளையவர் ஆவார். இவருடைய பெற்றோர் தங்கள் மகள்கள் கல்வி கற்பதன் அவசியத்தை உணர்ந்து இருந்தனர், மேலும் வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடர மாவல்வாலாவை ஊக்குவித்தனர். மாவல்வாலா தனது குழந்தைப் பருவத்தில் பெரும்பான்மையாக கணிதம் மற்றும் அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்தார், [7] சரதுசம் மீது நம்பிக்கை கொண்டாவராக இவர் வளார்க்கப்பட்டார். [4] அகனளான மாவல்வாலா மற்றும் இவருடைய துணைக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் வசிக்கிறார்கள். மாவல்வாலா 2010 இல் கராச்சி சென்றார். [2] [8] [9] [10] [11]

வெளிப்படையாக அகனள் என தன்னை அறிவித்துக் கொண்டார் மற்றும் பாகிஸ்தானியராக இருப்பதால், மாவல்வாலா நிறைய கேள்விகளை எதிர்கொள்கிறார். கல்லூரி முடிக்கும் வரை மாவல்வாலா தனது பாலியல் நோக்குநிலை பற்றி அறிந்திருக்கவில்லை. மாவல்வாலா , பாலின பாத்திரங்கள் மற்றும் தற்போது இருக்கும் பல்வேறு தடைகளை எவ்வாறு உடைக்க முடிந்தது மற்றும் அவள் விரும்பும் தொழிலை எவ்வாறு தொடர முடிந்தது என்பது போன்ற கேள்விகளை பெரும்பான்மையாக எதிர்கொள்கிறார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

எம்ஐடியில் பட்டதாரி மாணவராக, டாக்டர் இராய்னர் வெய்ஸின் கீழ் தனது முனைவர் பட்டத்தினைப் பெற்றார், அங்கு மாவால்வாலா ஈர்ப்பு அலைகளை கண்டறிய ஒரு முன்மாதிரி சீரொளி குறுக்கிட்டு மானியினை உருவாக்கினார்.[12] பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, முதுகலை ஆராய்ச்சியாளராகவும், பின்னர் கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும், தனது பணியினைத் துவங்கினார்[13] பின்னர் லைகோவில் பணிபுரிந்தார். [2] மாவல்வாலா முக்கியமாக ஈர்ப்பு அலைகள் வானியற்பியல் மற்றும் குவாண்டம் அளவீட்டு அறிவியல் ஆகிய இயற்பியலின் இரண்டு துறைகளில் கவனம் செலுத்துகிறார் . [14] முனைவர் மாவல்வாலா 2002 இல் எம்ஐடி இயற்பியல் பீடத்தில் சேர்ந்தார். [2] 2017 ஆம் ஆண்டில் இவர் தேசிய அறிவியல் அகாதமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[15]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

2017 ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்ட முதல் லாகூர் தொழில்நுட்ப விருதை மாவல்வாலா வென்றார்.[16] 2017, நியூயார்க்கின் கார்னகி கார்ப்பரேஷன் மாவல்வாலாவை "அமெரிக்க சமுதாய முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியதற்காக" சிறந்த குடியேறியவராக அறிவித்து கௌரவித்தது.[17] 2016, அண்டவியலில் க்ரூபர் விருதினை இன்னொரு ஆராய்ச்சியாளாருடன் இணைந்து பெற்றார்.[18]2016, அடிப்படை இயற்பியலில் விருதினை இன்னொரு ஆராய்ச்சியாளாருடன் இணைந்து பெற்றார் [19] 2014, NOGLSTP மாவல்வாலாவை ஆண்டின் சிறந்த நங்கை, நம்பி, ஈரர், திருனர் விஞ்ஞானியாக அங்கீகரித்தது. [20]

சான்றுகள்[தொகு]

  1. "Nergis Mavalvala - MIT Department of Physics". http://web.mit.edu/physics/people/faculty/mavalvala_nergis.html. 
  2. 2.0 2.1 2.2 2.3 "Gravitational wave researcher succeeds by being herself". June 2012. http://www.sciencemag.org/careers/2012/06/just-herself. 
  3. "MIT Kavli Institute Directory - MIT Kavli Institute for Astrophysics and Space Research". http://space.mit.edu/people/mavalvala-nergis. 
  4. 4.0 4.1 "Making waves". 25 February 2016. http://www.thehindu.com/features/kids/read-about-nergis-mavalvala-who-made-the-news-last-week/article8280169.ece. 
  5. "Nergis Mavalvala named School of Science dean". http://news.mit.edu/2020/nergis-mavalvala-science-dean-0817. 
  6. "Pak born scientist played significant role in discovery of gravitational waves". 13 February 2016. http://www.business-standard.com/article/news-ani/pak-born-scientist-played-significant-role-in-discovery-of-gravitational-waves-116021300386_1.html. 
  7. Nergis Mavalvala: The Karachiite who went on to detect Einstein's gravitational waves. (2016, February 13). Retrieved March 25, 2018, from https://www.dawn.com/news/1239270
  8. "Nergis Mavalvala, Pakistan's unexpected celebrity scientist". 15 February 2016. http://www.dawn.com/news/1239667/. 
  9. "Karachi bike repairman inspired Mavalvala". http://tribune.com.pk/story/1047678/karachi-bike-repairman-inspired-mavalvala/. 
  10. "Meet The Queer Woman Who Proved Einstein's Theory About Gravitational Waves". http://www.newnownext.com/meet-the-queer-woman-who-proved-einsteins-theory-about-gravitational-waves/02/2016/. 
  11. "Interview of Nargis Mavalvala". https://www.youtube.com/watch?v=1vfceLjs3lU. 
  12. "Nergis Mavalvala". http://www.tedxcle.com/nergis-mavalvala/. 
  13. Pakistan-born scientist played part in discovery of gravitational waves. (2016, February 13). Retrieved March 25, 2018, from https://tribune.com.pk/story/1046004/scientific-breakthrough-pakistan-born-scientist-played-part-in-discovery/
  14. "Welcome to the Page of Nergis Mavalvala" இம் மூலத்தில் இருந்து 2020-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200703201055/https://emvogil-3.mit.edu/~nergis/. 
  15. "Press release: National Academy of Sciences elects six MIT professors for 2017". MIT News. May 3, 2017. https://news.mit.edu/2017/nas-elects-six-mit-professors-0503. 
  16. "Nergis first recipient of Lahore Technology Award" (in en-US). The Nation இம் மூலத்தில் இருந்து 2020-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200703213504/https://nation.com.pk/18-Dec-2017/nergis-first-recipient-of-lahore-technology-award. 
  17. Carnegie Corporation of New York. "2017 Great Immigrants Honorees". https://www.carnegie.org/news/articles/2017-great-immigrants-honorees-pride-america/. 
  18. "Gruber Prize in Cosmology Laureate 2016". https://gruber.yale.edu/cosmology/2016/ligo-discovery-team. 
  19. "Special Fundamental Breakthrough Prize 2016". https://breakthroughprize.org/Laureates/1/P4/Y2016. 
  20. "NOGLSTP Recognition Awards to Atherton, Bland, Burke, and Mavalvala". NOGLSTP. https://www.noglstp.org/publications-documents/announcements-2/2014-11-8-noglstp-recognition-awards-to-atherton-bland-burke-and-mavalvala/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெர்கிசு_மாவல்வலா&oldid=3561120" இருந்து மீள்விக்கப்பட்டது