நெருப்பை விரும்பும் செடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெருப்பை விரும்பும் செடி

வகைப்பாடு[தொகு]

தாவரவியல் பெயர் : பாங்க்சியா கிராண்டிஸ் Banksia grandis

குடும்பம்  : புரோடீயேசியீ (Proteaceae)

இதரப் பெயர் : Bull banksias

பாங்க்சியா கிராண்டிஸ்

செடியின் அமைவு[தொகு]

இம்மரம் 10 முதல் 30 அடி உயரம் வளரக்கூடியது. இதில் நெருக்கமாக பல கிளைகள் உண்டு. இதனுடைய இலைகள் மிகவும் விசித்திரமானது. ஒரு அடி நீளம் மட்டுமே உள்ளது. இதனுடைய விளிம்பு பற்கள் போன்று உள்ளது. இலை பச்சை முதல் சாம்பல் பச்சை நிறத்தில் இருக்கும். பூ மிகவும் அழகாக இருக்கும். பூவைச் சுற்றி பூவடிச் செதில் அதிகமாக இருக்கும். பூக்கள் தூகை போல் உள்ளது. இதன் தாயகம் ஆஸ்திரேலியா ஆகும். சர் ஜோசப் பாங்க்ஸ் என்கிற ஆங்கில விஞ்ஞானியின் பெயர் இம்மரத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 46 சாதிகள் உள்ளது. நெருப்பு என்றால் தாவரங்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஆனால் இச்செடியின் விதைகள் வெடித்து சிதறுவதற்கு நெருப்பு மிகவும் அவசியம். வெடித்து சிதறினால் மட்டுமே விதைகள் முளைக்கும். நெருப்பு ஏற்படவில்லை என்றால் இச்செடிகள் செடிகள் முளைப்பது கிடையாது. சிறு புதர்கள் தீ பிடித்து எரியும் போது ஏற்படும் வெப்பத்தால் கனியின் ஓடு வெடித்து விதையை வெளியே கொட்டுகிறது.

மேற்கோள்[தொகு]

| 1 || சிறியதும் - பெரியதும் [1] || அறிவியல் வெளியீடு || ஜூன் 2001

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.