நெய்வண்ண ஓவியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


நெய்வண்ண ஓவியம்[தொகு]

ஓவியக்கலை உயர்ந்த நிலையை அடைந்ததற்கு நெய்வண்ண முறை முதற் காரணமாக இருந்தது. இந்த முறையைக் கண்டு பிடித்தவர் பெல்ஜியம் நாட்டுப் பிளான்டெர்ஸ் பகுதியைச் சேர்ந்த யான்வான் ஐக் [1389-1440] என்பவர்.

நெய்வண்ண ஓவியம்

தயாரிக்கும் முறை[தொகு]

இவருக்கு முன்பு வண்ணங்களைக் குழைய்க்க முட்டைக் கருவையோ தண்ணிரையோ கையாண்டனர். இவருடைய முயற்சியினால் ஆளிவிதை போன்ற விதைகளின் எண்ணெய் பயன்படும் என்பது தெரியவந்தது. எண்ணெய் கரைத்துத் தீட்டப்பெற்று உலர்ந்த வண்ணங்கள் ஒளிபெற விளங்கியது மல்லாமல் ஓவியங்கள் தண்ணீரால் பாதிப்பு அடையவில்லை. ஓவியர் எல்லோரும் முதலிலிருந்தே நெய்வண்ணத்தையே கையாளவேண்டும் என்பது ஜான் ரஸ்கின் [1819-1900]என்ற ஆங்கில ஆசிரியரின் கருத்து.நெய்வண்ண ஓவியங்கள் மரப்பலகை,காகிதம்,உலோகத்தகடு, கற்பலகை முதலியவற்றின்மேல் வரையப்பட்டுவந்தன. ஆனால் இக்காலத்தில் பெரும்பாலும் நாராலும் பருத்தி நூலாலும் நெய்யப்பட்ட தடித்த கித்தான்களின் மீது வரைகின்றனர்.மற்ற முறைகளில் ஓவியத்தைத் தீட்டிய பிறகு அதன்மேல் வேறு வண்ணங்களைத் தீட்டிப் படத்தை மற்ற முடியாது ; மாற்றவும் கூடாது. ஆனால் நெய்வண்ணங்களைப் பலவாறு, பலநாள்,பலமாதம், பல ஆண்டுகள் கூட வண்ணந் தீட்டிகொண்டிருக்கலாம்.

வண்ணம் தீட்டும் முறைகள்[தொகு]

ஆளிவிதை எண்ணெயும், கர்பூரத் தைலம் பயன்படுத்தி வண்ணம் தீட்டபடுகிறது . ஆளிவிதை எண்ணெய் உலர இரண்டு நாளாகும். வண்ணங்கள் பளபளப்புக் கொடுக்கும். கற்பூரத் தைலம் சில நிமிடங்களில் உலர்ந்து விடும். கற்பூரத் தைலம் சில நிமிடங்களில் உலர்ந்து விடும் . வண்ணங்களின் பளபளப்பை எடுத்துவிடும். தூரிகைகளை மண்ணெணெய் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்

இந்தியாவில் நெய்வண்ணக் கலை[தொகு]

இக்கலை 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அரசு கலைக்கல்வி சாலைகளில் நெய்வண்ண ஓவியம் பாடமாக கற்று கொடுக்கப்படுகிறது. பிரபல இந்திய ஓவியர்கள் ரவிவர்மர், மதுரையை சேர்ந்த ராமசாமி நாயுடு. மேலை நாட்டினர் அமிருத ஷேர்க்ல், பால்கோக்கீன் சிறப்புமிக்கவர்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. கலைக் கலைஞ்சியம் தொகுப்பு ஆறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெய்வண்ண_ஓவியம்&oldid=3599552" இலிருந்து மீள்விக்கப்பட்டது