நெய்யாறு இடதுகரைக் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேரள எல்லையில் கட்டப்பட்டிருக்கின்ற நெய்யாறு அணையில் இருந்து, தமிழ்நாடு எல்லையில் அமைந்திருக்கின்ற விளவங்கோடு வட்டத்தின் மேற்குப்பாகப் பாசனத்திற்காக உருவாக்கப் பட்ட திட்டமாகும். நெய்யாறு அணையின் நீர்பிடிப்பு இடங்கள் கேரள மாநிலத்திலும், தமிழ் நாடு மாநிலத்திலும் பரந்து இருக்கின்றது. முதல் ஐந்து ஆண்டுத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த திட்டம், தமிழ்நாட்டில் இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, இடதுகரை கால்வாய் வெட்டப்ட்டது. நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் மொத்த நீளம் 38.4 கிலோமீட்டர்கள்.