உள்ளடக்கத்துக்குச் செல்

நெயாற்றிங்கரை வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெயாற்றிங்கரை வாசுதேவன்
பிறப்பு1938
பிறப்பிடம்நெய்யாற்றிங்கரை, கேரளம், இந்தியா
இறப்பு (அகவை 68)
இசை வடிவங்கள்கருநாடக இசை
தொழில்(கள்)கருநாடக இசை இசையமைப்பாளர்
நெயாற்றிங்கரை வாசுதேவன் தொடுபுழா மனோஜ்குமாருடன் வயலினில் பாட, எரிக்காவு என். சுனில் மிருதங்கம் வாசிக்க, இளஞ்சிமேல். பி. சுஷில்குமார் கடம் வாசிக்கிறார்.

நெய்யாற்றிங்கரை வாசுதேவன் (Neyyattinkara Vasudevan, 1938–13 மே 2008) என்பவர் கேரளத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைப் பாடகர் ஆவார். பத்மஸ்ரீ விருது பெற்ற கருநாடக இசைப் பாடகரான இவர், செம்மங்குடி சீனிவாச ஐயர், இராம்நாட் கிருஷ்ணன் ஆகியோரின் சீடருமாவார். பரவலான பாராட்டப்பட்ட தன் தொழில் வாழ்க்கையில் இவர் பாரம்பரியத்தையும் புதுமையையும் இணைத்து செயல்பட்டார். முன்னதாக உயர் சாதியினரின் ஆதிக்கத்தில் இருந்த கருநாடக இசைத் துறையில் சிறந்து விளங்கிய தலித் சமூகத்தைச் சேர்ந்த முன்னோடிகளில் ஒருவராக வாசுதேவன் புகழ் பெற்றவர். [1]

வாழ்க்கை வரலாறு

[தொகு]

வாசுதேவன் தெற்கு திருவிதாங்கூரில் உள்ள நெய்யாற்றிங்கரைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஏழை தலித் குடும்பத்தில் பிறந்தார். [1] இவர் திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதி திருநாள் இசைக் கல்லூரியில் தனது இசைப் படிப்பை முக்கியமாக செம்மங்குடி சீனிவாச ஐயரிடம் பயின்றார். இவர் இராம்நாட் கிருஷ்ணனிடம் உயர்நிலைப் படிப்பையும் மேற்கொண்டார். இவர் 1960 இல் கணபூஷணம் மற்றும், 1962 இல் சங்கீத வித்வான் ஆகியவற்றில் தேர்சி பெற்றார். [2]

திருப்பூணித்துறையில் உள்ள ஆர். எல். வி இசைக் கல்லூரியில் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1974 இல் அகில இந்திய வானொலியில் ஏ-கிரேடு பாடகராக பணிக்குச் சேர்ந்தார். 2000 இல் ஓய்வு பெற்றார், பின்னர் அகில இந்திய வானொலியால் பாரம்பரிய இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமான 'ஏ டாப்' என தரவரிசைப்படுத்தப்பட்டார். [3]

இவர் 13 மே 2008 அன்று திருவனந்தபுரத்தில் கல்லீரல் இழைநார் வளர்ச்சி நோயால் தனது 68வது வயதில் காலமானார் [3] இவர் இறந்தபோது இவருக்கு ஜெயராஜ், பாபுராஜ் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இவரின் மனைவி அம்முக்குட்டி இவருக்கு முன்பே இறந்துவிட்டார்.

விருதுகள்

[தொகு]

திரைப்படங்கள்

[தொகு]

அவர் சில மலையாளத் திரைப்படங்களுக்கு பாடியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 "Kerala's Dalit singer who sang his way through caste shackles - Indian Express".
  2. ↑ "Q4music: Sri Neyyattinkara Vasudevan". Q4music. 2008-05-13. Retrieved 2018-05-29.
  3. 1 2 "Neyyattinkara Vasudevan dead". தி இந்து. 14 May 2008 இம் மூலத்தில் இருந்து 22 May 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080522162715/http://www.hindu.com/2008/05/14/stories/2008051455640700.htm.
  4. ↑ "Search Awardees - Padma Awards - My India, My Pride - Know India: National Portal of India". Archived from the original on 9 October 2012. Retrieved 28 May 2011.
  5. ↑ "Classical Music". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 24 February 2023.
  6. ↑ "Kerala Sangeetha Nataka Akademi Award: Classical Music". Department of Cultural Affairs, Government of Kerala. Retrieved 26 February 2023.
  7. ↑ "SNA Awardees' List". Sangeet Natak Akademi. 2016. Archived from the original on 30 May 2015. Retrieved 5 February 2016.