உள்ளடக்கத்துக்குச் செல்

நெமிலிச்சேரி (திருவள்ளூர் மாவட்டம்)

ஆள்கூறுகள்: 13°07′06″N 80°02′58″E / 13.1184°N 80.0494°E / 13.1184; 80.0494
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெமிலிச்சேரி
Nemilicheri
நகரம்
நெமிலிச்சேரி Nemilicheri is located in தமிழ் நாடு
நெமிலிச்சேரி Nemilicheri
நெமிலிச்சேரி
Nemilicheri
நெமிலிச்சேரி, திருவள்ளூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 13°07′06″N 80°02′58″E / 13.1184°N 80.0494°E / 13.1184; 80.0494
நாடு இந்தியா
மாநிலம்=Tamil Naduதமிழ்நாடு
மாவட்டம்திருவள்ளூர் மாவட்டம்
ஏற்றம்
76 m (249 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
602024[1]
அருகிலுள்ள ஊர்கள்திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, வேப்பம்பட்டு மற்றும் பூந்தமல்லி
மாவட்ட ஆட்சித் தலைவர்மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப.
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிஆவடி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்ற உறுப்பினர்எஸ். எம். நாசர்

நெமிலிச்சேரி (Nemilicheri) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூர் பகுதிக்கு அருகிலுள்ள பகுதியாகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 76 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நெமிலிச்சேரி பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 13°07′06″N 80°02′58″E / 13.1184°N 80.0494°E / 13.1184; 80.0494 ஆகும். திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி, வேப்பம்பட்டு மற்றும் பூந்தமல்லி ஆகியவை நெமிலிசேரி பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.

இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை (வண்டலூர் - மீஞ்சூர் இடையே), நெமிலிச்சேரி வழியாகச் செல்கிறது.[2]

சென்னையிலிருந்து அரக்கோணம் மார்க்கம் செல்லும் புறநகர் இருப்புப் பாதையில், நெமிலிச்சேரி தொடருந்து நிலையம் அமைந்து, நெமிலிச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு பலனளிக்கிறது.[3][4]

நெமிலிச்சேரி பகுதியானது, ஆவடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் எசு.எம். நாசர் ஆவார். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதியை சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கே. செயக்குமார், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "NEMILICHERY Pin Code - 602024, Sriperumbudur All Post Office Areas PIN Codes, Search TIRUVALLUR Post Office Address". news.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  2. "Tamil Nadu govt nod awaited to collect fee in four toll gates in Chennai's outer ring road". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  3. "Nemilichery railway station" (in ஆங்கிலம்). 2022-09-20. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.
  4. "தென்னை மர துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற போதை ஆசாமி கைது". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2023-07-13.

புற இணைப்புகள்

[தொகு]