நெப்டியூனியம்(V) ஆக்சைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
நெப்டியூனியம்(V) ஆக்சைடு
| |
| வேறு பெயர்கள்
நெப்டியூனியம் பெண்டாக்சைடு
டைநெப்டியூனியம் பெண்டாக்சைடு | |
| இனங்காட்டிகள் | |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| Np2O5 | |
| வாய்ப்பாட்டு எடை | 554.09 கி/மோல்[1] |
| தோற்றம் | பச்சை நிறப் படிகங்கள்[2] |
| அடர்த்தி | 8.18 கி/செ.மீ3[2] |
| உருகுநிலை | 427 °C; 800 °F; 700 K[3] (சிதைவடையும்) |
| கரையாது[2] | |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | நெப்டியூனியம்(V) புளோரைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | புரோடாக்டினியம்(V) ஆக்சைடு இருயுரேனியம் ஐந்தாக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நெப்டியூனியம்(V) ஆக்சைடு (Neptunium(V) oxide) என்பது Np2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] நெப்டியூனியம் பெண்டாக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. சாத்தியமுள்ள இரண்டு நெப்டியூனியம் ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். நெப்டியூனியம்(IV) ஆக்சைடு மற்றொரு நெப்டியூனியம் ஆக்சைடாகும்.[3]
வரலாறு
[தொகு]நெப்டியூனியம்(V) ஆக்சைடு முதன்முதலில் 1963 ஆம் ஆண்டு நெப்டியூனைல்(V) அயனிகளைக் கொண்ட உருகிய இலித்தியம் பெர்குளோரேட்டு வழியாக ஓசோனைச் செலுத்தி, விளைபொருளை வீழ்படிவாக்குவதன் மூலம் தயாரிக்கப்பட்டது.[4]
தயாரிப்பு
[தொகு]நெப்டியூனியம்(VI) ஆக்சைடு (NpO3·xH2O), நெப்டியூனைல்(V) ஐதராக்சைடு (NpO2OH), நெப்டியூனைல்(VI) ஐதராக்சைடு (NpO2(OH)2), நெப்டியூனியம்(V) நைட்ரேட்டுகள் (NpO(NO3)3 அல்லது NpO2NO3) போன்ற நெப்டியூனியத்தின் பிற சேர்மங்களை அதிக வெப்பநிலையில் சுட்டு நெப்டியூனியம்(V) ஆக்சைடைத் தயாரிக்கலாம்.[5][6]
கரைசலிலுள்ள நெப்டியூனைல் அயனிகளை வீழ்படிவாக்குவதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்.:[2][6]
- 2NpO2+(நீரிய) + H2O(நீர்மம்) -> Np2O5(படிகம்) + H+(நீரிய)
வினைகள்
[தொகு]நெப்டியூனியம்(V) ஆக்சைடு 700 கெல்வின் வெப்பநிலையில் சிதைவடைந்து, நெப்டியூனியம்(IV) ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் வாயுவை உருவாக்குகிறது:[3][5]
- Np2O5 -> NpO2 + 1/2 O2
நெப்டியூனைல்(VI) ஐதராக்சைடை அதிக வெப்பநிலையில் சுட்டு உற்பத்தி செய்யப்படும் நெப்டியூனியம்(V) ஆக்சைடு சேர்மம் NpO2 சேர்மத்தை அடைவதற்கு முன்பு ஓர் இடைநிலை கட்டமான Np4O9 வழியாகச் செல்கிறது.[5]
கட்டமைப்பு
[தொகு]
நெப்டியூனியம்(V) ஆக்சைடு ஓர் அடுக்கு அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. வெவ்வேறு அடுக்குகளில் உள்ள தொடர்புடைய நெப்டியூனியம் அணுக்கள் ஆக்சிசன் அணுக்களால் பாலமாகி, நெப்டியூனைல் நேர்மின் அயனிகளின் சங்கிலிகளை உருவாக்குகின்றன. ஒவ்வொரு அடுக்குக்குள்ளும், நெப்டியூனைல் நேர்மின் அயனிகள் ஆக்சிசன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன.[2]
நெப்டியூனியம்(V) ஆக்சைடின் படிக அமைப்பு மூன்று தனித்துவமான நெப்டியூனியம் தளங்களைக் கொண்டுள்ளது. இரண்டு தளங்கள் ஐங்கோண இருபிரமிடல் ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளன. மற்றொன்று நாற்கோண இருபிரமிடல் ஒருங்கிணைப்பு வடிவவியலைக் கொண்டுள்ளது.[2]
நெப்டியூனியம்(V) ஆக்சைடு படிகங்கள் ஒற்றைச் சாய்வு கொண்டவையாகும். P2/c என்ற இடக்குழுவும், ஒர் அலகு செல்லிற்கு நான்கு வாய்ப்பாட்டு அலகுகளும் a=8.17Å, b=6.58Å, c=9.313Å, மற்றும் β=116.09°. என்ற அணிக்கோவை அளவுருக்களும் கட்டமைப்பில் உள்ளன. சேர்மத்தின் அடர்த்தி 8.18 கிராம்/செ.மீ3 ஆகும்.[2]
பிற பண்புகள்
[தொகு]நெப்டியூனியம்(V) ஆக்சைடு 22 கெல்வின் வெப்பநிலையில் எதிர்பெர்ரோ காந்த வரிசைப்படுத்தலுக்கு உட்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 WebElements, https://www.webelements.com
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Forbes, Tori Z.; Burns, Peter C.; Skanthakumar, S.; Soderholm, L. (14 Feb 2007). "Synthesis, Structure, and Magnetism of Np2O5". Journal of the American Chemical Society 129 (10): 2760–2761. doi:10.1021/ja069250r. பப்மெட்:17298069. Bibcode: 2007JAChS.129.2760F.
- ↑ 3.0 3.1 3.2 Zhang, Lei; Dzik, Ewa A.; Sigmon, Ginger E.; Szymanowski, Jennifer E.S.; Navrotsky, Alexandra; Burns, Peter C. (2018). "Experimental thermochemistry of neptunium oxides: Np2O5 and NpO2". Journal of Nuclear Materials 501: 398–403. doi:10.1016/j.jnucmat.2017.10.034.
- ↑ Yoshida, Zenko; Johnson, Stephen; Kimura, Takaumi; Krsul, John (2011). "Neptunium". The Chemistry of the Actinide and Transactinide Elements (PDF). p. 724. doi:10.1007/978-94-007-0211-0_6. ISBN 978-1-4020-3555-5.
- ↑ 5.0 5.1 5.2 Fahey, J. A.; Turcotte, R. P.; Chikalla, T. D. (1976). "Decomposition, stoichiometry and structure of neptunium oxides". Journal of Inorganic and Nuclear Chemistry 38 (3): 495–500. doi:10.1016/0022-1902(76)80291-6. https://archive.org/details/sim_journal-of-inorganic-and-nuclear-chemistry_1976_38_3/page/n134.
- ↑ 6.0 6.1 Lemire, R. J. et al., Chemical Thermodynamics of Neptunium and Plutonium, Elsevier, Amsterdam, 2001.