நெதர்லாந்தின் மாகாணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெதர்லாந்தின் மாகாணங்கள்
Provinces of the Netherlands
Provincies van Nederland (டச்சு மொழி)
வார்ப்புரு:Provinces of the Netherlands imagemap
வகைஒருமுக அரசு
அமைவிடம் நெதர்லாந்து
எண்ணிக்கை12 மாகாணங்கள்
மக்கள்தொகைகுறைந்தபட்சம்: சீலாந்து, 381,568
அதிகபட்சம்: தென் ஒல்லாந்து, 3,650,222
பரப்புகள்குறைந்தபட்சம் (நீர் பரபரப்பை சேர்த்து): Utrecht, 1,450 km2 (559 sq mi)
அதிகபட்சம் (நீர் பரபரப்பை சேர்த்து): பிரீஸ்லாண்டு, 5,700 km2 (2,220 sq mi)
அரசுமாகாண சபை
உட்பிரிவுகள்நகராட்சி

நெதர்லாந்து மாகாணங்கள் என அழைக்கப்படும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் அரசியின் ஆணையாளர்கள் (Commissaris van de Koningin) எனப்படுபவர்களால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. லிம்பர்க் மாகாணத்தில் மட்டும் இவர்கள் ஆளுனர்கள் (Gouverneur) என அழைக்கப்படுகின்றனர். எல்லா மாகாணங்களும் முனிசிப்பாலிட்டி எனப்படும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 13 மார்ச் 2010 நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த முனிசிப்பாலிட்டிகளின் தொகை 430 ஆகும்.[1]

நிர்வாகம்[தொகு]

நெதர்லாந்து நாடு நீர் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மேலாண்மைக்குப் பொறுப்பாக உள்ள நீர்ச் சபைககள் (water board) இம் மாவட்டங்களை நிர்வகிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி 27 இவ்வாறான நீர் மாவட்டங்கள் இருந்தன. நாடு உருவாவதற்கு முன்பே நீர்ச் சபைகள் இருந்துள்ளன. 1196ல் இவை முதன் முதலில் உருவாகின. டச்சு நீர்ச் சபை, இன்றும் செயற்படுகின்ற உலகின் சனநாயக நிறுவனங்களுள் மிகவும் பழையது எனக் கருதப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2018-11-21.