நெடுமுடி

ஆள்கூறுகள்: 9°26′34″N 76°24′14″E / 9.442871°N 76.40399°E / 9.442871; 76.40399
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெடுமுடி
கிராமம்
ஆள்கூறுகள்: 9°26′34″N 76°24′14″E / 9.442871°N 76.40399°E / 9.442871; 76.40399
நாடு இந்தியா
மாநிலங்கள்கேரளா
மாவட்டம்ஆலப்புழா மாவட்டம்
ஏற்றம்.75 m (2.46 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்15,428
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்688508
Telephone code0477
அருகில் உள்ள நகரம்ஆலப்புழா
எழுத்தறிவு100%
நாடாளுமன்ற தொகுதிஆலப்புழா
சட்டமன்ற தொகுதிமாவேலிக்கரை

இந்தியாவின் கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் நெடுமுடி (Nedumudi).[1] மலையாள நடிகர் நெடுமுடி வேணுவின் பிறப்பிடம் இந்த கிராமமாகும். பம்பா ஆற்றங்கரையில் நெடுமுடி கிராமம் அமைந்துள்ளது. கேரளாவில் 100% கல்வியறிவைப் பெற்ற முதல் கிராமம் இதுவாகும் . 

காலநிலை[தொகு]

நெடுமுடி குட்டநாட்டின் ஒரு பகுதியாகும். இங்கு மிதமான காலநிலையை நிலவுகிறது. இலையுதிர்காலத்தில், பாம்பா நதியில் வெள்ளப்பெருக்கு காணப்படும். ஆற்றின் இந்த நீரோட்டமானது நெடுமுடியின் முக்கிய பொருளாதார தொழிலான விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த கிராமத்தின் முக்கிய கொண்டாட்டமாக கோட்டாறில் உள்ள ஸ்ரீ பகவதி கோயிலின் ஆண்டு விழா உள்ளது. இது அத்தவத்தலாவில் அமைந்துள்ளது. இந்த விழாவை நெடுமுடியின் நான்கு காரங்கள் (துணைப்பிரிவுகள்) அமைப்பும் கோயில் நிர்வாகமும் இணைந்து நடத்துகின்றன.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நெடுமுடியின் மக்கள் தொகை 14601 ஆக இருந்தது, இதில் 7,049 ஆண்களும் 7,552 பெண்களும் உள்ளனர்.[2] நெடுமுடி கிராமம் புவியியல் ரீதியாக 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது 1) அத்தவத்தலா 2) தொட்டுவத்தலா 3) தெக்கேமுரி 4) போங்கா

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India:Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. https://www.census2011.co.in/data/village/628245-nedumudi-kerala.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுமுடி&oldid=3396010" இலிருந்து மீள்விக்கப்பட்டது