நெடுங்குழு 4 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நெடுங்குழு 4 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நெடுங்குழு → 4
↓  கிடை வரிசை
4 Titanium crystal bar
22
Ti
5 Zirconium crystal bar
40
Zr
6 Hafnium crystal bar%
72
Hf
7 104
Rf

நெடுங்குழு 4 (Group 4) இல் உள்ள தனிமங்கள் டைட்டேனியம் தொகுதி தனிமங்களாகும். இக்குழுவில் உலோகங்களான டைட்டேனியம் (Ti), சிர்க்கோனியம்(Zr), ஆஃப்னியம்(Hf) and ரூதெர்ஃபோர்டியம்(Rf) ஆகிய நான்கும் இருக்கின்றன. இக்குழுவில் எல்லாம் d-வலைக் குழுவை சார்ந்த உலோகங்களாகும். இந்த நெடுங்குளுவிர்க்கு வேதியலில் எந்த ஒரு தனி பெயரும் கிடையாது. எனவே இவை இடை நிலை உலோகங்களாகவே கருதப்படுகிறது. நெடுங்குழு 4 உலோகங்களில் டைட்டேனியம், சிர்க்கோனியம், ஆஃப்னியம் ஆகிய மூன்றும் இயற்கையாக கிடைக்கின்றன. இவை மூன்றும் ஒத்த பண்புகளை உடையவை. ஆனால் ரூதெர்ஃபோர்டியம் மட்டும் அராய்ச்சி கூடத்தில் தயாரிக்கப் படுகிறது. ரூதெர்ஃபோர்டியத்தின் எல்லா ஓரிடத்தான்களும் கதிரியக்கப் பண்புகளை கொண்டுள்ளது. இக்குழுவின் மற்ற உறுப்பினர்களான அன்பென்ட்வாடியம் மற்றும் அன்பென்ட்ஹெக்சியம் ஆகிய இரண்டும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.

வேதியல் பண்புகள்[தொகு]

எல்லா நெடுங்குழுக்களை போலவே இங்கும் எதிர்மின்னி அமைப்பில், இறுதிக் கூட்டில் எல்லா தனிமங்களும் இரண்டு எதிர்மின்னியை கொண்டுள்ளன. ஆனால் ரூதெர்ஃபோர்டியம் பற்றி அதிக அளவு ஆராய்சிகள் எதுவும் நடத்த படாத காரணத்திலால் அதை பற்றி சிறு குறிப்புகளே உள்ளன.

அணு எண் தனிமம் ஒரு கூட்டில் உள்ள எதிர்மின்னிகள்
22 டைட்டேனியம் 2, 8, 10, 2
40 சிர்க்கோனியம் 2, 8, 18, 10, 2
72 ஆஃப்னியம் 2, 8, 18, 32, 10, 2
104 ரூதெர்ஃபோர்டியம் 2, 8, 18, 32, 32, 10, 2


இயற்பியல் பண்புகள்[தொகு]

இவற்றின் இயற்பியல் பண்புகள் கீழே அட்டவணையில் உள்ளது. மேலே சொன்னது போல் ரூதெர்ஃபோர்டியம் பற்றி சில குறிப்புகளே உள்ளன.

டைட்டேனியம் சிர்க்கோனியம் ஆஃப்னியம் ரூதெர்ஃபோர்டியம்
உருகுநிலை 1941 K (1668 °C) 2130 K (1857 °C) 2506 K (2233 °C) 2400 K (2100 °C)
கொதிநிலை 3560 K (3287 °C) 4682 K (4409 °C) 4876 K (4603 °C) 5800 K (5500 °C)
அடர்த்தி 4.507 g•cm−3 6.511 g•cm−3 13.31 g•cm−3 23 g•cm−3
தோற்றம் வெள்ளியை ஒத்த உலோக நிறம் வெள்ளியை ஒத்த வெள்ளை நிறம் வெள்ளியை ஒத்த சாம்பல் நிறம் ?
அணு ஆரம் 140 pm 155 pm 155 pm  ?"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுங்குழு_4_தனிமங்கள்&oldid=1363141" இருந்து மீள்விக்கப்பட்டது