நெடுங்காடு
Appearance
நெடுங்காடு, இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரம்.
அரசியல்
[தொகு]இது நெடுங்காடு சட்டமன்றத் தொகுதிக்கும், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]நெடுங்காடு கொம்யூன் மற்றும் கோட்டுச்சேரி கொம்யூன் ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்து நெடுங்காடு சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.[2]
நெடுங்காடு காரைக்காலில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவிலும்,புகழ்பெற்ற திருநள்ளாறு பகுதியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
நண்டலாறு மற்றும் வாஞ்சியாறு ஆகிய ஆறுகள் நெடுங்காடு வழியாக செல்கின்றன.
நெடுங்காடு எல்லையை அடுத்து தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ளது.
நெடுங்காட்டைச் சுற்றி பல சிறிய கிராமங்கள் உள்ளன.
விவசாயம் நெடுங்காட்டின் முக்கிய தொழில் ஆகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
- ↑ "Nedungadu Commune Pan chayat".