நெசவுத் தொழிற்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவிலுள்ள பருத்தி நெசவாலைகளில் அதிகளவிற்குத் தமிழ் நாட்டில் அமைந்து காணப்படுகிறது. இருப்பினம் 1997ம் ஆண்டுப்படி பருத்தித்துணி உற்பத்தியில் தமிழ்நாடு ஆறாவது இடத்தை வகித்தது. தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி மற்றம் மலிவான நெசவுத் தொழிலாளர்கள் ஆகிய காரணிகள் நெசவுத் தொழிலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு காணப்படும் நீர்மின் விசை உற்பத்தி இத் தொழிற்சாலைகள் சிற ந்து விளங்க ஏதுவாக அமைந்துள்ளது. பருத்தி நெசவாலைகள் குறிப்பாக கோயமுத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில்

சிறந்து விளங்குகின்றன. ஏனெனில் இம்மாவட்டங்களில் நெசவாலைகளுக்கான மின் விசையானது பைகாரா மற்றும் மேட்டூர் நீர்மின்விசை உற்பத்தி மையங்களிலிருந்த பெறப்படுகிறது. இவற்றைத் தவிர நெசவாலைகள் செனனை, பெரம்பலூர் திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவடங்களிலும் அமைந்து காணப்படுகின்றன.

பருத்தி நெசுவுத் தொழிற்சாலைகள் நெசவுத் தொழிற்சாலைகளைப் பொருத்தமட்டில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை 1) பருத்தி நெசவாலைகள் 2) பட்டு நெசவுத் தொழில் மற்றம் 3) பின்னலாடைத் தொழில் ஆகியனவாகும். தமிழகத்தின் முதலாவது பருத்தி நெசவுத் தொழிற்சாலையானது பின்னி மற்றம் ஹார்வேஸ் என்றழைக்கப்பட்டது. இங்கு விளையும் பருத்தியினை முற்றிலும் அபகரித்து விடும் நோக்கிலேயே நெசவுத் தொழிற்சாலையானது தொடங்கப்பட்டது. குறைந்த தரம் கொண்ட உற்பத்திப் பொருட்களை உள்ளுர் சந்தையிலும் தரம் வாய்ந்த உற்பத்திப் பொருட்கள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. 1930-1950ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நீர்மின்சக்தித் திட்டங்கள் இத்தொழிலை மேலும் சிறப்படையச் செய்தன. குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இத்தொழிற்சாலைகள் வெகுவாக வளர்ச்சியடைந்தன. இதன் விளைவாகவே கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது. இத்தொழிற்சாலைகளின் முதற்கட்ட வளர்ச்சி 1957-ம் ஆண்டுகளில் ஆரம்பமானது. பருத்தி நெநசவுத் தொழிற்சாலைகளானது ஏனைய தொழிற்சாலைகளைக் காட்டிலும் பெரிய அளவிலான உற்பத்தித் தொழிற்சாலைகளாக விளங்கின. இத்தொழிற்சாலைகளில் மட்டும் 40 சதவீத தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்று விளங்குகின்றனர். 1957-ம் ஆண்டில் 226 பருத்தி விதை நிக்கும் தொழிற்சாலைகளம் 184 நூற்பு மற்றும் நெசவாலைகளும் அமைந்து காணப்பட்டன. இந்த இரண்டு பிரிவுகளிலும் 88 சதவிதத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். 1960 மற்றும் 1970ம் ஆண்டுகளில் பருத்தி நெசவுத் தொழிற்சாலைகள் வெகுவாக வளர ஆரம்பித்தன. குறிப்பாக தமிழ்நாட்டின் பெரு நகரங்களான கோயம்புத்தூர், திண்டுக்கல், மதுரை, தேனி, திருநெல்வேலி மற்றம் விருதுநகர் ஆகிய மையங்களில் இத்தொழிற்கள் சிறந்து விளங்குகின்றன.