நெகிழி ஒட்டுத்தகடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெகிழி ஒட்டுத்தகடு (Plastic Laminate) என்பது அட்டைத்தாள், நெகிழிப் பிசின், ஒட்டுபொருள் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு கூட்டுக் கட்டிடப் பொருள் ஆகும். நெகிழிப் பிசினின் தோய்த்த அட்டைத்தாள்களைப் பல படைகளாக ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து உயர் வெப்பநிலையின் கீழ் அழுத்தி ஒரே தகடாக்கப்படும். இதன் மேல் அழகூட்டல் தாள் அல்லது மெலமைன் மென்தகட்டை ஒட்டுப்பொருள் கொண்டு ஒட்டி உருவாக்கப்பட்ட மேற்படையும் இறுதியில் மேற்பரப்பாக ஒளிபுகவிடும் யுரத்தேன் காப்புப் படலமும் இருக்கும்.

நெகிழி ஒட்டுத்தகடுகள் பல நூறு ஒற்றை நிறங்களைக் கொண்டனவாகவும், பல்வேறு வடிவங்கள் தீட்டப்பட்ட மேற்பரப்பை உடையனவாகவும் கிடைக்கின்றன. இவற்றோடு பல்வேறு வகையான இயற்கைப் பொருட்களின் மேற்பரப்பைப் போலவும் இவற்றைச் செயற்கையாக உருவாக்க முடியும். குறிப்பாக, பல்வேறு மரப்பலகை வகைகள், இயற்கைக் கற்பலகைகள், ஓடுகள், உலோகங்கள் போன்றவற்றின் மேற்பரப்புக்களைப் போன்ற தோற்றங்களை நெகிழி ஒட்டுத்தகடுகளின் மேற்பரப்பில் கொண்டுவர முடியும். உயர் தரத்திலான ஒட்டுத்தகடுகள் மேற்படி பொருட்களின் மேற்பரப்புத் தோற்றத்தை துல்லியமாகக் கொடுக்கும் அதே வேளை அவற்றோடு ஒப்பிடும்போது பல மடங்கு குறைவான செலவிலும் இவற்றைப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

நெகிழி ஒட்டுத்தகடுகள், தளபாடத் துறையிலும், கட்டடத் துறையிலும் பெருமளவுக்குப் பயன் படுகின்றன.

வகைகள்[தொகு]

நெகிழி ஒட்டுத்தகடுகள் அவை உற்பத்தியாகும் முறைகளின் அடிப்படையில் இரண்டு வகைகளாக உள்ளன. அவை, உயர் அழுத்த நெகிழி ஒட்டுத்தகடுகள், தாழ் அழுத்த நெகிழி ஒட்டுத்தகடுகள் என்பன.

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • McGowan, Maryrose., Specifying Interiors, John Wiley & Sons Inc., New Jersey, 2006.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழி_ஒட்டுத்தகடு&oldid=2646542" இலிருந்து மீள்விக்கப்பட்டது