நெகிழிச் சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெகிழிச் சாலைகள் என்று அறியப்படுவன முழுவதும் நெகிழியால் அல்லது நெகிழி சார்ந்த கூட்டுப் பொருட்களால் இழையப்படும் சாலைகள் ஆகும். ஆஸ்பால்ட் என்னும் பைஞ்சுதையால் இழையப்படும் சாலைகளில் இருந்து இவை வேறுபட்டவை.

வகைகள்[தொகு]

இரண்டு வகையான நெகிழிச் சாலைகள் புழக்கத்தில் உள்ளன.

  • நெகிழியினால் மட்டுமே இடப்படும் சாலைகள் நுகர்வோர் பயன்படுத்தி எறிந்த நெகிழிக் குப்பைகளை பயன்படுத்துகின்றன.[1]
  • நெகிழியோடு ஆஸ்பால்ட் கலவைச் சேர்த்து இடப்படும் சாலைகள் நெகிழியை ஒரு கூட்டுப் பொருளாக மட்டும் பயன்படுத்துகின்றன.

தொழில்நுட்ப வளர்ச்சி[தொகு]

நெகிழியோடு ஆஸ்பால்ட் கலவைச் சேர்த்து இடப்படும் சாலைகள் 2001 ஆம் இராசகோபாலன் வாசுதேவன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வகை சாலைகள் நெகிழி மறுசுழற்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பல்வேறு நாடுகள் இவ்வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.[2]

நெகிழியினால் மட்டும் இடப்படும் சாலைகள் 2018 ஆம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டில் முதன் முறையாக அதன் இரு முக்கிய நகரங்களில் மிதிவண்டி பாதைகளாக அமைக்கப்பட்டன. வால்க்கர் வெசல்ஸ், வேவின் மற்றும் டோட்டல் ஆகிய மூன்று நிறுவனங்களின் கூட்டுப் பெருமுயற்சியால் இது சாத்தியமானது. இதுவே உலகில் இடப்பட்ட முதல் நெகிழிச் சாலையாக கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "நெகிழிக் குப்பைகளை அகற்ற நெகிழிச் சாலைகள் எப்படி பயன்படுகின்றன என்பது குறித்த தி சகார்ட்டா போஸ்ட்டில் வெளியான செய்தி (ஆங்கிலம்)". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "இராசகோபாலன் வாசுதேவன் பற்றி தி கார்டியன் வலைத்தளத்தில் வெளியான செய்தி (ஆங்கிலம்)". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "நெதர்லாந்து நெகிழிச் சாலைகள் பற்றி தி திங்க்கு பிரோகிரசு வலைத்தளத்தில் வெளியான தகவல் (ஆங்கிலம்)". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழிச்_சாலைகள்&oldid=3580200" இலிருந்து மீள்விக்கப்பட்டது