நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூற்றெட்டுத் திருப்பதிக் கோவை [1] [2] என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வங்கிபுரத்தாய்ச்சி என்னும் பெண்புலவரால் இயற்றப்பட்ட வைணவ நூல். இது கோவை என்னும் சிற்றிலக்கியம் அன்று. 108 வைணவத் திருத்தலங்களைக் கோவைப்படுத்திப் பாடப்பட்ட நூல். இது நீண்ட கலிப்பாவால் ஆன நூல். ஆழ்வார்களின் பெயர்களும் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 395. 
  2. தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலையக் குறிப்பு தொகுதி 2 பக்கம் 238-9