நூறு வருட மட்டுநகர் நினைவுகள்
நூறு வருட மட்டுநகர் நினைவுகள் என்பது 1893 - 1993 வரையான மட்டக்களப்பின் சமூக வரலாற்றைக் கூறும் ஒரு நூல்.[1][2] இதனை எஸ். பிரான்சிஸ் என்பவர் எழுதியிருக்கிறார். இந்நூல் திருகோணமலை - மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் 100 ஆண்டு (யூபிலி ஆண்டு) நினைவு நூலாக வெளியிடப்பட்டது.[3] இது ஒரு கத்தோலிக்க நினைவுகளைக் கூறும் நூலாக இருந்தபோதிலும், நூறு ஆண்டு காலத்தில் இலங்கையின் மட்டக்களப்பில் ஏற்பட்ட நிகழ்வுகள், கல்வி நிலை, சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள் என்பன இந்நூலில் காணக்கிடைக்கின்றன. எ.கா: அப்போது கல்லடிப் பாலம் இல்லாதபோது அக்கறைக்குச் செல்ல விதவைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன என்பதை இந்நூல் பதிவு செய்துள்ளது.[4] அது தொடர்பான வரலாற்று ஒளிப்படங்களும் நூலில் இணைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினருக்கு அனுபவ பகிர்வு போன்று இது அமைந்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் இல்லாத அல்லது பயன்பாட்டில் இருந்து அருகி வரும் பொருட்களான உமல், கரப்பு, ஓட்டிக்கூடு, ஆசந்தி, உடுக்கை, தூம்பை, அத்தாங்கு, நண்டுக்கூடு போன்றவை படங்களாக வரையப்பட்டிருப்பது இதன் சிறப்பு ஆகும்.
பொருளடக்கம்[தொகு]
- சுருக்க வரலாறு
- வாழ்க்கை வசதிகள்
- சனமும் சாகியமும்
- கிறிஸ்தவ சமயம்
- கத்தோலிக்க சமயம்
- கத்தோலிக்க சமயம் பற்றிய தெளிவு
- பாதயாத்திரைகள்
- நினைவைவிட்டு நீங்காத நிகழ்ச்சி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "மட்டக்களப்பு". 9 பெப்ரவரி 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மதுர தமிழ் பேசும் மட்டக்கள்பபு மக்கள்".
- ↑ வெட்டாப்பு. திருமலை - மட்டக்களப்பு மறைமாவட்டம். 1-1-1995.
- ↑ "கல்லடிப் பாலத்தில் ஆபத்து ; மக்கள் அவதானம் (காணொளி இணைப்பு)". வீரகேசரி.