நூத் (எகிப்திய பசுக் கடவுள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூத்
தலையில் நீர்க்குடம், இடது கையில் அன்கு சின்னம் தாங்கிய பெண் கடவுள் நூத்
துணைகெப்
பெற்றோர்கள்சூ மற்றும் டெப்நூத்
சகோதரன்/சகோதரிகெப்
குழந்தைகள்ஒசிரிசு, ஓரசு, சேத், இசிஸ் மற்றும் நெப்திஸ்

நூத் (Nut) வானம், விண்மீன்கள், அண்டம், தாய்மை மற்றும் வானவியல் ஆகியவற்றுக்கு அதிபதியான பண்டைய எகிப்தியப் பெண் கடவுள் ஆவார். நூத் கடவுள் நட்சத்திரங்களால் மூடப்பட்ட நிலையில் நிர்வாணப் பெண்ணாக பூமியின் மீது வளைந்து இருக்கும் பசுவாகக் காணப்பட்டார்.[1]இப்பெண் கடவுள் தலையில் நீர்க்குடம் ஏந்திவாறு காணப்படுதே இதன் அடையாளம் ஆகும். காற்றின் கடவுளான இவரது தந்தை சூ மற்றும் பூமிக் கடவுளான இவரது தாய் டெப்நூத் ஆவார். நூத் மற்றும் கடவுள் கெப்பிற்கும் பிறந்த குழந்தைகள் ஒசிரிசு, ஓரசு, சேத், இசிஸ் மற்றும் நெப்திஸ் ஆவார்.

இரவில் சூரியனை விழுங்கும் நூத் கடவுள், இது விடியற்காலையில் நூத் கடவுள் மறுபிறப்பு பெற இரவில் தனது உடல் வழியாக பயணிக்கிறது

வானத்தின் கடவுளான நூத், சூ-டெப்நூத் கடவுளர்களின் மகள் ஆவார். இவரது உடன் பிறந்த சகோதரன் கெப் இவரது கணவரும் ஆவார். இவரது நான்கு மகன்களில் ஒசிரிசு, சேத், இசிஸ் மற்றும் நெப்திஸ் ஆகியோரும் எகிப்தியக் கடவுள்களே.[2] எகிப்தியக் கடவுள்களில் மிகவும் பழைய கடவுள்களில் ஒருவராக நூத் பெண் கடவுள் கருதப்படுகிறார்.[3] துவக்கத்தில் நூத் பெண் கடவுளை வானத்து இரவின் கடவுளாகக் கருதினாலும், பின்னர் வானத்தின் கடவுளாக வழிபடப்பட்டார். பெண்கள் வயிற்றில் கருப்பை தாங்குவதை நினைவு கூறும் விதமாக பெண் கடவுளான நூத் தன் தலையில் சிறு நீர்குடத்தை தாங்கி காட்சியளிக்கிறார். பெரும்பாலும் பெண் கடவுளான நூத், மனித வடிவில் நிர்வானமாக சித்தரிக்கப்பட்டாலும், சில நேரங்களில் பசு வடிவமாகவும், அதனைச் சுற்றி வானம், சொர்க்கம், விண்மீன்கள், அத்தி மரங்கள், குட்டிகள் காட்டுப்ப் பன்றியிடம் பால் அருந்துவது போன்றும் சித்தரிக்கப்படுகிறார்.

ஒரு சவப்பெட்டியின் குறுக்கே நீட்டப்பட்ட சிறகுகளுடன் பெரிய அளவிலான நூத் கடவுள்

இரா கடவுள் மற்றும் நூத் பற்றிய தொன்மவியல்[தொகு]

பசுவாக சித்தரிக்கப்படும் வானத்து பெண் கடவுளான நூத்

உலகை ஆளும் சூரியக் கடவுளான இராவின் கட்டளைப் படி, வானத்துப் பெண் கடவுளான நூத்தால் கூடுதலாக ஒரு நாளையும் உண்டாக்க முடியவில்லை. அந்த காலத்தில் ஆண்டிற்கு 360 நாட்கள் மட்டுமே. இது குறித்து நூத் பெண் கடவுள் ஞானத்தின கடவுளான தோத் உடன் பேசினார். தோத்தின் திட்டப்படி, பல முறை சந்திரக் கடவுளான கோன்சுவுடன், பெண் கடவுளான நூத் சூதாட்டம் ஆடினார். ஒவ்வொரு முறையும் சூதாட்டத்தில் தோற்ற சந்திரக் கடவுள் கோன்சுவிடமிருந்து ஒளியைப் பெற்று கூடுதலாக 5 நாட்களை உருவாக்கினார். ஆனால் இதை சூரியக் கடவுள் இரா ஏற்கவில்லை. எனவே நூத் கடவுள் இறப்பின் கடவுள் ஒசிரிசு, போர்க் கடவுள் ஓரசு, தீமை மற்றும் பாலைவனக் கடவுளான சேத், மாயஜாலப் பெண் கடவுளான இசிஸ் மற்றும் நீர்க்கடவுளான நெப்திஸ் போன்ற 5 கடவுளர்களை ஈன்றார். [4][5] இதனால் கோபமுற்ற சூரியக் கடவுள் இரா, நூத் கடவுளை, அவரது கணவரும், நித்தியக் கடவுளான கெப்பிடமிருந்து பிரித்தார்.

பெண் கடவுள் நூத்தின் பங்கு[தொகு]

வானத்துப் பெண் கடவுள் நூத்தை தாங்கி நிற்கும் தந்தையும், காற்றின் கடவுளுமான சூ மற்றும் ஆட்டுத் தலைகளுடன் கூடிய தேவதைகள், அடியில் கீழ் சாய்திருக்கும் பூமிக் கடவுள் கெப்

வானத்தின் பெண் கடவுளான நூத், அனைத்து பரலோகப் பொருட்கள், இறந்தவர்களின் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையில் நுழையும் போது அவர்களைப் பாதுகாப்பவர் ஆவார். பண்டைய எகிப்திய சமயத்தின் படி, இரவில் சூரியன் மற்றும் சந்திரன் போன்ற ஒளி வீசக்கூடியவைகள் நூத் தெய்வத்தால் விழுங்கப்பட்டு, இரவில் அவள் வயிற்றைக் கடந்து, விடியற்காலையில் மறுபிறவி அடைவார்கள்.[6]

நூத் பெண் தெய்வம் தனது கால்விரல்களிலும் விரல் நுனிகளிலும் பூமியின் மேல் வளைந்திருப்பதாக சித்தரிக்கப்பட்டாள்; அவரது உடல் விண்மீன்கள் நிறைந்த வானமாக சித்தரிக்கப்பட்டது. நூத்தின் கை மற்றும் கால் விரல்கள் நான்கு திசைகளைத் தொடும் என்று நம்பப்பட்டது.

இவரது மகனும், இறப்பின் கடவுளுமான ஒசிரிசை காப்பாற்றுவதில் அவரது பஙகு நூத் கடவுள் ஒரு நண்பராகவும் இறந்தவர்களின் பாதுகாவலராகவும் காணப்பட்டார். நூத் கடவுள் இறந்தவர்களை அவளது நட்சத்திரம் நிறைந்த வானத்தில் இழுத்து, உணவு மற்றும் மது கொடுத்து புதுப்பிப்பதாக கருதப்பட்டது.

இறந்தவர்களின் பதப்படுத்தப்பட்ட மம்மி வைக்கப்பட்டுள்ள கல் சவப்பெட்டி உள் மூடியில் நூத் கடவுளின் உருவம் வர்ணம் பூசப்படுவதால், இறந்தவரின் சடலத்தை பாதுகாக்கிறார் என எகிப்தியர்கள் நம்பினர். சவப் பெட்டியின் மேல்புறத்தில் இருண்ட நீல நிறத்துடன் பல நட்சத்திரங்களுடன், கடவுள் நூத்தை பிரதிநிதித்துவமாக வரையப்பட்டிருந்தது.

இறந்தோர் நூல், பெண் கடவுள் நூத் தேவியின் சைக்காமூர் மரத்தை வாழ்த்துங்கள்! உன்னில் உள்ள நீர் மற்றும் காற்று எனக்குக் கொடுங்கள். உனுவில் அந்த சிம்மாசனத்தை நான் தழுவுகிறேன். நான் நெகேக்-உரின் முட்டையைக் காத்துக்கொண்டிருக்கிறேன்.அது அமைதியாக செழித்து வளர்கிறது எனக்கூறுகிறது.''

நூத் பசு நூல்[தொகு]

கிமு 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய எகிப்தியர்களின் வான சாஸ்திர நூலை நூத் பசுவின் நூல் என்பவர். இந்த நூல் நட்சத்திர தெய்வங்கள் மற்றும் பல்வேறு வானம் மற்றும் பூமி தெய்வங்களைப் பற்றியும் கூறுகிறது. நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் சுழற்சிகள் மற்றும் அவைகள் வானத்தில் கடக்கும் நேரத்தை இந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Cavendish, Richard (1998). Mythology, An Illustrated Encyclopaedia of the Principal Myths and Religions of the World. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84056-070-3.
  2. Hart, George (200t). The Routledge Dictionary of Egyptian Gods and Goddesses. Routledge. p. 110
  3. The Oxford Encyclopedia of Ancient Egypt, by Leonard H. Lesko, 2001.
  4. Plutarch. Plutarch's Moralia (Loeb)/Isis and Osiris. Translated by Babbitt, Frank. p. 12.
  5. Budge, E. A. Wallis (1908). Books on Egypt and Chaldaea: Egyptian Ideas of the Future Life. Vol. 1 (3rd ed.). London: Kegan Paul, Trench, Trubner & Co. Ltd. p. 42-44. பார்க்கப்பட்ட நாள் September 4, 2019.
  6. Hart, George Routledge dictionary of Egyptian gods and goddesses Routledge; 2 edition (15 March 2005) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-34495-1 p.111 Books.google.co.uk
  7. Alexandra von Lieven: Grundriss des Laufes der Sterne. Das sogenannte Nutbuch. The Carsten Niebuhr Institute of Ancient Eastern Studies, Kopenhagen 2007.

ஆதார நூற்பட்டியல்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகாள்[தொகு]