நுஸ்கி மாவட்டம்
நுஷ்கி மாவட்டம்
ضلع نوشکی نوشکے دمگ | |
---|---|
மாவட்டம் | |
மேல்: நுஷ்கி பாலைவன ஒட்டகங்கள் கீழ்: நுஷ்கி நகரம் அருகே ஊசிப்பாறைகள் | |
![]() பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நுஷ்கி மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | பலூசிஸ்தான் |
கோட்டம் | ரக்ஷன் |
Established | N/A |
தலைமையிடம் | நுஷ்கி |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
• துணை ஆணையர் | N/A |
• D | N/A |
பரப்பளவு | |
• மாவட்டம் | 5,797 km2 (2,238 sq mi) |
மக்கள்தொகை (2023)[1] | |
• மாவட்டம் | 2,07,834 |
• அடர்த்தி | 36/km2 (93/sq mi) |
• நகர்ப்புறம் | 48,572 |
• நாட்டுப்புறம் | 1,59,262 |
எழுத்தறிவு | |
• எழுத்தறிவு |
|
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
வருவாய் வட்டங்கள் | 1 |
நுஸ்கி மாவட்டம் அல்லது நோஸ்கி மாவட்டம் (Nushki District), பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்கில் அமைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் வடமேற்கில் பாகிஸ்தான்-ஆப்கானித்தான் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிடம் நுஸ்கி நகரம் ஆகும்.
அமைவிடம்
[தொகு]கடல்மட்டத்திலிருந்து 2900 அடி உயரத்தில் அமைந்த நூஸ்கி மாவட்டம், பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்மேற்கே அமைந்துள்ளது. நுஷ்கியிலிருந்து நகரத்திலிருந்து, தட்டையான பலூசிஸ்தான் பாலைவனம் வடக்கு மற்றும் மேற்கு நோக்கி ஹெல்மண்ட் ஆறு வரை நீண்டுள்ளது. [3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாகிஸ்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நுஷ்கி மாவட்டம் 31,255 குடியிருப்புகளும், 2,07,834 மக்கள் தொகையும் கொண்டது. பாலின விகிதம் . 100 பெண்களுக்கு 108.75 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.12% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 69.24% மற்றும் பெண்களின் எழுத்தறிவு 44.16% ஆக உள்ளது.[4][5]இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்ட குழந்தைகள் 73,251 (35.35%) ஆக உள்ளனர்.[6]நகர்புறங்களில் 48,572 (23.37%) மக்கள் வாழ்கின்றனர்.[4]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாமியர்கள் 99.13%, இந்து சமயத்தினர் 0.69% மற்றும் பிறர் 0.23% ஆக உள்ளனர்.[1]
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் பிராகுயி மொழி 56.87%, பலூச்சி மொழி 38.46%, பஷ்தூ மொழி 4.34 மற்றும் பிற மொழிகளை 0.33% மக்கள் பேசுகின்றனர். பிராய்கி மொழி
மாவட்ட நிர்வாகம்
[தொகு]நுஷ்கி மாவட்ட ஒரே ஒரு வருவாய் வட்டம், கொண்டுள்ளது. மேலும் 8 ஒன்றியக் குழுக்களைக் கொண்டுள்ளது.
பலுசிஸ்தான் விடுதலைப்படையின் தாகுதல்கள்
[தொகு]நோஸ்கி மாவட்டம் வழியாக 8 பேருந்துகளில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் துணை இராணுவ வீரர்கள் மீது பலுசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 90 வீரர்கள் கொல்லப்படனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.[7][8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Population by Mother Tongue, Sex and Rural/Urban, Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
- ↑
"Nushki". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
- ↑ 4.0 4.1 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ BLA claims 90 Pakistani soldiers killed in attack on army convoy in Balochistan
- ↑ Blast targets bus carrying security forces in Pakistan, killing several; Baloch Army claims attack
- ↑ Pakistani security officers killed in blast claimed by Baloch separatists
உசாத்துணை
[தொகு]- 1998 District census report of Chagai. Census publication. Vol. 38. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.