நுவேவா எசிஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுவேவா எசிஜா
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடு பிலிப்பீன்சு
பிராந்தியம் மத்திய லூசோன்
நேர வலயம் பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

நுவேவா எசிஜா (Nueva Ecija) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், மத்திய லூசோன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஏழு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மலோலொஸ் ஆகும். இது 1801 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது.[2] இம்மாகாணத்தில் 849 கிராமங்களும், 27 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் க்சாரினா உமாலி (Czarina Umali) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 5,751.33 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக நுவேவா எசிஜா மாகாணத்தின் சனத்தொகை 2,151,461 ஆகும்.[3] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 12ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 10ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 77.8% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர். இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 370 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 16ஆம் மாகாணம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. பார்த்த நாள் 30 December 2013.
  2. PromdiNEWS: Bulacan celebrates 435th founding year
  3. "Population of the provine".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவேவா_எசிஜா&oldid=2168861" இருந்து மீள்விக்கப்பட்டது