நுவன் குணவர்தன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுவன் குணவர்தன
Nuwan Gunawardana
නුවන් ගුණවර්ධන
பிறப்புநுவன் குணவர்தன
(1949-05-13)13 மே 1949
இலங்கை மேலாட்சி
இலங்கை
இறப்பு8 திசம்பர் 2022(2022-12-08) (அகவை 73)
சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, இலங்கை
தேசியம்இலங்கையர்
பணிஇசையமைப்பாளர், பாடகர், இசைக்கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1970–2022
வாழ்க்கைத்
துணை
இரமோனா குணவர்தன
பிள்ளைகள்கயன் மற்றும் துலாரியா

நுவன் குணவர்தன (Nuwan Gunawardana) இலங்கையைச் சேர்ந்த ஒர் இசையமைப்பாளர் ஆவார். இசைக்கலைஞராகவும் பாடகராகவும் கூட இவர் அறியப்படுகிறார். 1949 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் நாளன்று பிறந்தார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

குணவர்தன 1949 மே 13 அன்று இலங்கையில் (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது) பிறந்தார். ஏர் சிலோனில் விமான இயந்திரப் பொறியாளராகப் பணிபுரிந்த இவர், பணியின் போது பொழுதுபோக்காகப் பாடத் தொடங்கினார். ஒலி பொறியாளர் மெர்வின் பெயின்சு இவரது திறமையைக் கண்டறிந்து திரைப்பட பின்னணி பாடலுக்கு வழிகாட்டினார். 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் பிரபலமான இந்திப் பாடல்களைப் பாடி குணவர்தன புகழ் பெற்றார். பின்னர் இலங்கையில் ஒரு பிரபல கச்சேரி பாடகரானார். இரமோனா குணவர்தனவை மணந்து கொண்டார். வணிகப் பெண்மணியான துலாரியா மற்றும் நடிகரும் பாடகருமான கயான் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

இறப்பு[தொகு]

குணவர்தன 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் நாளன்று மாரடைப்பால் 73 வயதில் காலமானார் [3] இறக்கும் போது சிறீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவன்_குணவர்தன&oldid=3857432" இலிருந்து மீள்விக்கப்பட்டது