நுரையீரல் இழையச் சிதைவு
Appearance
நுரையீரல் இழையச் சிதைவு Lung Infarction | |
---|---|
ஒத்தசொற்கள் | Pulmonary infarction |
நுரையீரல் இழையச் சிதைவு பிணக்கூறாய்வின் போது | |
சிறப்பு | pulmonology, இதயவியல் |
நுரையீரலுக்கு இரத்தத்தினை எடுத்துச்செல்லும் தமனியின் செயல் தடுக்கப்படும்போது நுரையீரலின் ஒரு பகுதி செயலிழக்கும் போது நுரையீரல் இழையச் சிதைவு (Lung infarction) ஏற்படுகிறது.[1] இது பெரும்பாலும் நுரையீரல் தமணியடைப்பால் ஏற்படுகிறது. மூச்சுக்குழாய் இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் இரத்த ஓட்டம் ஆகிய இரண்டிலிருந்தும் நுரையீரலுக்கு இரட்டை இரத்த வழங்கல் இருப்பதால், நுரையீரல் இழையம் அழிவினை பொதுவாக எதிர்க்கும் தன்மையுடையது. மூச்சுக்குழாய் சுழற்சியின் மூச்சுத் திணறல் ஏற்படாது. ஆனால் நுரையீரல் சுழற்சி தடைசெய்யப்படும்போது நுரையீரல் தமணியடைப்பு ஏற்படும் இதனை மூச்சுக்குழாய் இரத்த ஓட்டம் முழுமையாக ஈடுசெய்ய முடியாது.[2]
-
நாள்பட்ட நுரையீரல் தமனியடைப்பு (வெள்ளை அம்பு) காரணமாக நுரையீரல் பாதிப்பின் (சி.டி ஸ்கேன்) பாதிக்கப்பட்ட பகுதி (கருப்பு அம்பு) ஒரு தலைகீழ் ஒளிவட்டம் அடையாளத்தைக் கொண்டுள்ளது .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Philip T. Cagle (2008). Color atlas and text of pulmonary pathology (2 ed.). Philadelphia: Lippincott Williams & Wilkins. p. 291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781782081.
- ↑ Thomas H. McConnell (2007). The Nature of Disease: Pathology for the Health Professions. Lippincott Williams & Wilkins. pp. 81–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7817-5317-3.