நுனித் தொடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நுனித் தொடுப்பு
Sackstich Tropfen.jpg
பெயர்கள்நுனித் தொடுப்பு, ஐரோப்பிய இறப்பு முடிச்சு, ஒருபக்க நுனித் தொடுப்பு, பெருவிரல் முடிச்சு, திறந்தகை முடிச்சு
வகைதொடுப்பு
தொடர்புநுனி முடிச்சு, நீர் முடிச்சு
பொதுப் பயன்பாடுமலையேற்றம், பாறையிறக்கம்.
ABoK
  1. 1410

நுனித் தொடுப்பு என்பது இரண்டு கயிறுகளைத் தொடுப்பதற்குப் பயன்படும் எளிமையான தொடுப்பு முடிச்சு ஆகும். ஒருபக்க நுனித் தொடுப்பு, ஐரோப்பிய இறப்பு முடிச்சு போன்ற பெயர்களாலும் இம் முடிச்சு அழைக்கப்படுகிறது. முடிச்சு கயிறுகளின் திசையில் அல்லாமல் ஒரு பக்கமாக விலகி இருப்பதால் "ஒருபக்க நுனித் தொடுப்பு" என்னும் பெயரும், ஐரோப்பாவில் மலையேறும் முயற்சிகளில் இம் முடிச்சுக் காரணமாக ஏற்பட்ட தீநேர்ச்சிகளைக் குறித்து "ஐரோப்பிய இறப்பு முடிச்சு" என்னும் பெயரும் ஏற்பட்டது.

முடியும் முறை[தொகு]

Binder's knot.png

1. இரண்டு கயிறுகளினதும் ஒவ்வொரு முனைகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கவேண்டும்.
2. இரண்டையும் சேர்த்து ஒரு தடம் ஆக்கிக்கொள்ள வேண்டும்.
3. இரண்டு செயல்முனைகளையும் ஒருங்கே சேர்த்துத் தடத்தினூடாகச் செலுத்த வேண்டும்.
4. செயல்முனைகளையும், நிலைமுனைகளையும் இழுத்து இறுக்கிக்கொள்ள வேண்டும்.

கயிறுகள் வெவ்வேறு அளவான விட்டங்கள் கொண்டவையாக இருந்தால், மெல்லிய அல்லது இழுபடக்கூடிய கயிறு படத்தில் காட்டிய பச்சைக் கயிறு இருக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு பாதுகாப்பு நுனி முடிச்சையும் இந்தக் கயிற்றைக்கொண்டே முடியவேண்டும்.

பயன்கள்[தொகு]

மலையேறுவோர் செங்குத்தான பாறைகளில் இறங்கும் முயற்சிகளின்போது இதனைப் பயன்படுத்துவது உண்டு. இறங்கவேண்டிய தூரம் வழமையான 50-60 மீட்டர் கயிறுகளின் நீளத்திலும் அதிகமாகும்போது கயிறுகளைத் தொடுப்பதற்கு இந்தத் தொடுப்பைப் பயன்படுத்துவர். இந்த முடிச்சின் பெரும்பகுதி கயிற்றுக்கு வெளியில் இருப்பதால், கயிறு இலகுவாக மலைச் சரிவுகளில் வழுக்குவதற்கு உதவியாக உள்ளது. அத்துடன் இம் முடிச்சின் அளவு சிறியதாக உள்ளதால், கயிற்றை இழுத்து எடுக்கும்போது பாறை இடுக்குகளில் சிக்கிக்கொள்ளாமல் வருவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். மேற்படி காரணங்களும் இத் தொடுப்பை இலகுவாக முடியத்தக்கதாக இருப்பதும் மலையேறுவோர் இதனைப் பரவலாகப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுனித்_தொடுப்பு&oldid=1352878" இருந்து மீள்விக்கப்பட்டது