நுண் விலங்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓர் எண்காலி நுண்-விலங்கு உலோரியா பார்மோசா

நுண்-விலங்குகள் (Micro-animals) என்பவை மிகவும் சிறிய சாதாரண கண்களுக்குத் தெரியாத நுண்நோக்கிகளால் மட்டுமே பார்க்க இயல்கின்ற உயிரினங்களாகும். பெரும்பாலும் இவ்வகை நுண்ணுயிர்கள் பலசெல் உயிரினங்களாகக் காணப்பட்டாலும் அவை முதுகெலும்பிகளாக இல்லை[1] . நுண்நோக்கியில் மட்டுமே காணவியல்கின்ற கணுக்காலிகள், அகத்தூசிக் கிருமிகள், அக்காரினாக் கிருமிகள் மற்றும் ஓடுடலிகளான கடல் முகட்டுப் பூச்சிகள் மற்றும் கிளாடோசிராக்கள் முதலியனவும் நுண்-விலங்கு வகையில் உள்ளடங்கும். நன்னீர்வாழ் விலங்குகளான வடிகட்டி உண்ணும் வட்டுயிர்களும் வேறுவகையான நுண்நோக்கி விலங்குகள் குழுவாகக் கருதப்படுகின்றன. சிலவகை உருளைப்புழுக்கள், சமீபத்தில் கண்டறியப்பட்ட வளிவேண்டா உயிரினங்கள் உட்பட்ட உலோர்சிபெராக்கள் ஆகியனவும் நுண்ணூயிர்களேயாகும். வளிவேண்டா உயினங்கள் உயிர் வளியற்ற மண்டலங்களில் வாழும் தன்மையுடையவையாகும்[2][3] . சிலவகை நீர்க்கரடிகள், நீர்வாழ் நுண்விலங்குகள் போன்ற உயிரினங்களால், வாழ்வதற்கு பொருத்தமில்லாத வெற்றிடங்கள், விண்வெளி மற்றும் புற ஊதா கதிர்வீச்சுக்கு உட்படும் வானுயிரியல் சோதனை பிரதேசங்கள் ஆகியவற்றிலும் எதிர்த்து வாழமுடிகின்றது[4].

மெற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2010-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. "Animals thrive without oxygen at sea bottom". nature.com.
  3. "Briny deep basin may be home to animals thriving without oxygen". Science News.
  4. Simon, Matt (March 21, 2014). "Absurd Creature of the Week: The Incredible Critter That's Tough Enough to Survive in Space". Wired. 2014-03-21 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்_விலங்குகள்&oldid=3218804" இருந்து மீள்விக்கப்பட்டது