நுண் இடுக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெடிசிலேரியா அக்கேந்தஸ்டெர் பிளான்சி
பெடிசிலேரியா பொது அமைப்பு (அ) அஸ்டிராய்டு and (ஆ) எக்கினாய்டு

நுண் இடுக்கி (=பெடிசெல்லாரியா)(pedicellaria) என்பது சிறிய குறடு அல்லது நக வடிவ அசையும் தாடைபோன்ற அமைப்பாகும். இந்நுண் இடுக்கிகள் பொதுவாக முட்தோலிகளில் கடல் நட்சத்திரங்களிலும் (வகுப்பு ஆஸ்டிராய்டா) மற்றும் கடல் அர்ச்சின்களிலும் (வகுப்பு எக்கினாய்டியா) காணப்படுகிறது. இந்த பெடிசெல்லாரியாவில் தசைகள், உணர் உணர்விகளை கொண்டது. எனவே இந்த அமைப்பானது சூழல் மாறுபாடுகளுக்கு ஏற்ப செயல்படும். பிற விலங்கின தொகுதிகளில் உள்ள நுண் இடுக்கிகள் குறித்துத் தெளிவாக அறியப்படவில்லை. ஆனால் நுண் இடுக்கியின் செயலாக உயிரினங்களின் மேற்பகுதியில் காணப்படும் பாசிகளை நீக்கவும், ஏதேனும் பிற கழிவுகள் உடலின் மீது படிவதைத் தடுத்து உடலின் மேற்பகுதியினை சுத்தமாக வைத்திருக்க நுண் இடுக்கிகள் பயன்படுவதாகக் கருதப்படுகிறது.

கடல் நட்சத்திரம்[தொகு]

வளையம் போன்ற நுண் இடுக்கிகள் கொண்ட கடல் நட்சத்திரம்

வகைகள்[தொகு]

கடல் நட்சத்திரங்களில் நுண் இடுக்கி கால்கள் இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை நுனி நீள் வகை நுண் இடுக்கிகள் மற்றும் நுண் நீள் கத்தரி வகை இடுக்கிகள்.

அமைவிடம்[தொகு]

கடல் நட்சத்திரத்தில் பெடிசெல்லாரியா தோலின் மேற்பரப்பில் அமைந்திருக்கலாம் அல்லது நெகிழ்வான தண்டுகளில் பொருத்தப்படலாம். உயிரினங்களைப் பொறுத்து விலங்குகளின் உடலின் மேற்பரப்பில், வயிற்று, விளிம்பு அல்லது ஆக்டினல் மேற்பரப்பில் உள்ள குழிகளில், மற்றும்/அல்லது குழாய் கால் உரோமத்திற்கு அருகிலுள்ள ஆம்புலக்ரல் தட்டுகளில் காணப்படும்.[1] ஒவ்வொரு நுண் இடுக்கிகளும் மூன்று துண்டுகளால் ஆனது. அடிப்பகுதி ஒர் துண்டாகவும், மேற்பகுதியில் இரண்டு துண்டுகள் வாய்போன்று அமைந்துள்ளது. கடல் நட்சத்திரம் இந்த அமைப்பின் அடிப்படையிலே Forcipulate sea star என்று அழைக்கப்படுகிறது. இரண்டு துண்டுகளுடன் கூடிய நுண் இடுக்கிகளும் உள்ளன.

செயல்கள்[தொகு]

பொதுவாக பெடிசிலேரியா சுவாச உறுப்புகளைப் பாதுகாக்கவும், ஆழ்கடல் பகுதிகளில் வாழும் பிரிசின்கிடா உயிரிகளிலும், அண்டார்டிக்கா பகுதியில் வாழும் லேபிடிஸ்டெரிகளில் உணவு சேகரிக்கவும் பயன்படுகிறது.

கடல் அர்ச்சின்கள்[தொகு]

உருப்பெருக்கம் செய்யப்பட்ட நுண் இடுக்கி, கடல் அர்ச்சின்

வகைகள்[தொகு]

கடல் அர்ச்சின்களில் நான்கு வகையான நுண் இடுக்கிகள் காணப்படுகின்றன. அவை 1) டிரைடேக்டைலசு, 2) ஒபிசெபாலசு, 3) டிரைபைலோசு மற்றும் 4) குளோபிபெரசு. நுண் இடுக்கியின் மேற்பகுதியில் மூன்று சிறு துண்டுகள் தாடைபோன்று இடுக்கி பற்றும் அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இதனை தாங்கிப் பிடிக்கும் கால்போன்ற அமைப்பு ஒன்றுள்ளது. இதன் கழுத்துப் பகுதியானது அசையும் தன்மையுடையது.

அமைவிடம்[தொகு]

கடல் அர்ச்சின் மேலுறையின் மீது எப்பகுதியிலும் இந்த நுண் இடுக்கிகள் காணப்படலாம்.

செயல்கள்[தொகு]

ஒரு சில குடும்ப முட்தோலிகளில், குளோபிசெரசு நுண் இடுக்கி விசத்தன்மை கொண்ட அமைப்பாகப் பரிணாம மாற்றமடைந்துள்ளது. இதனால் இரையினை வேட்டையாட உதவுகிறது. டாக்சோபினுஸ்டிடே குடும்பத்தில் உள்ள டிரிப்பினுஸ்டெசு கிரேடில்லா மற்றும் டாக்சோபினுஸ்டெஸ் பிலோலசு சிற்றினங்களில் அதிக நச்சுத் தன்மை உடையதாகக் காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்_இடுக்கி&oldid=3032142" இருந்து மீள்விக்கப்பட்டது