நுண்ணுயிர் உரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நுண்ணுயிர் உரம் என்பது உயிரணு நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கும் ஒரு பொருள் ஆகும். இது விதைகள், தாவர பரப்புகளில் அல்லது மண் மீது பயன்படுத்தப்படும் போது, முதன்மை ஊட்டச்சத்துக்களின் கிடைக்கும் தன்மையை அதிகரிப்பதன் மூலம் தவரங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நுண்ணுயிர் உரங்கள் மண்ணில் நைட்ரஜன் நிலைநிறுத்தியும், பாஸ்பரஸ் கிடைக்கும் தன்மையை அதிகரித்தும் மற்றும் வளர்ச்சி ஊக்குவிக்கும் பொருட்களின் தொகுப்பு மூலம் தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

நுண்ணுயிர்உரம் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை குறைக்க பயன்படுகிறது. நுண்ணுயிர் உரம் அல்லது உயிர் உரங்களில் உள்ள நுண்ணுயிர்கள் மண்ணின் இயற்கை ஊட்டச்சத்து சுழற்சியை மீட்டெடுக்கின்றன மற்றும் மண் உயிரினத்தை உருவாக்குகின்றன. உயிரிய உரங்களை பயன்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான தாவரங்கள் வளர்க்க முடியும், அதே நேரத்தில் மண் தன்மை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நுண்ணுயிர்  உரம் பல நன்மைகள்  கொண்டிருப்பதால், இத்தகைய நன்மை பயக்கும் பாக்டீரியாவிற்கு ஒரு விஞ்ஞானத்தில் " தவரங்களின் வளர்ச்சி ஊக்குவிக்கும் ரைசோபாக்டீரியா " எனக் கருதப்படுகிறது.
நுண்ணுயிர்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் கரிம ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் மண் வளத்தை செழித்து, தாவர ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றுகிறது. உயிர் உரங்களில் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த இரசாயனமும் இல்லை.
அசோஸ்பைரில்லம் ரைசோபியம் பாஸ்போபாக்டீரியா அசோலா நீல பச்சை பாசிகள் போன்றவை முக்கியமான உயிர் உரங்கள்.
  ரைசோபியம் பயறு வகைப் பயிர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. கோதுமை, மக்காச்சோளம், கடுகு, பருத்தி, உருளைக்கிழங்கு மற்றும் பிற காய்கறிப் பயிர்கள் போன்ற பயிர்களுக்கு அசோட்டோபாக்டர் பயன்படுத்தப்படலாம். அசோஸ்பைரில்லம் தூண்டிகள் முக்கியமாக சோளம், கம்பு, சோளம், கரும்பு மற்றும் கோதுமைக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 நுண்ணுயிர் உரங்களின் பலன்கள் 
  *இவை மண்ணில் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதிப்படுத்துவதாகும்.
  *ஒருங்கிணைந்த நுண்ணுயிரிகள் எளிதில் பாதுகாப்பாக சிக்கலான கரிம பொருட்களை எளிமையான சேர்மங்களாக மாற்றும், 
  இதனால் அவை எளிதாக தாவரங்கள் மூலம் எடுத்துக்கொள்ளப்படும்.
  *நுண்ணுயிர் செயல்பாடு நீண்ட காலமாக உள்ளது, இதனால் மண் வளத்தை மேம்படுத்துகிறது. 
  *இது பயிர் விளைச்சலை 20-30% அதிகரிக்கிறது. 
  *இரசாயன நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸை 25% குறைத்து, தாவர வளர்ச்சியை தூண்டுகிறது.
  *இது வறட்சி மற்றும் சில மண் சார்ந்த நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை அளிக்கிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணுயிர்_உரம்&oldid=2724193" இருந்து மீள்விக்கப்பட்டது