நுண்ணுயிரெரிபொருள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நுண்ணுயிரெரிப்பொருள் (Microbiofuels) என்பது அடுத்தத்தலைமுறை எரிபொருள் எனலாம். இது நுண்ணுயிர்களான பாக்டீரியா, நீலப்பச்சைப்பாசி, நுண்பாசி, பூஞ்சைகளில் இருந்துப் பெறப்படுகின்றன. இவைகளால் நமக்கு எரிபொருள் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவைகள் தடையின்றியும், மறுசுழற்சி செய்தும் பெறலாம்.
தன்மை
[தொகு]இவை நுண்ணுயிர்களின் அணுவெறிகையால் வெளியிடப்படும் உற்பத்திப்பொருளாகும். இவை தற்பொது பயன்படுத்திக்கொண்டிருக்கும் எரிபொருளான பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்துவிட்டாலும் பல ஆராய்ச்சிகள் இதில் தொடர்ந்தவண்ணமுள்ளன. இவைகளில் குறிப்பிடத்தக்கனவாக எத்தனால், கொழுப்பமிலம், பியூட்டேன், நீரியம் என்பன உள்ளன.
சிறப்பியல்புகள்
[தொகு]இவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு குறையும், குறிப்பாக நுண்பாசிகளில் இருந்து பெறப்படும் உயிரெரியானது நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் நுண்பாசிகள் மற்றும் நீலப்பச்சைப்பாசிகள் சூரிய ஒளியைப்பயன்படுத்துவதால் உற்பத்திக்கான மூலப்பொருள் தேவை குறைகிறது. தற்போது பரவலாகப் பேசப்படும் உயிரெரியான ஆமணக்கு எண்ணெய் உற்பத்தி செய்யத்தேவையான நிலங்களுக்கு பதிலாக நுண்பாசிகளைப் பயன்படுத்தினால் இடப்பொருள் தேவை ஆயிரமடங்கு குறைகிறது.
சாத்தியக்கூறுகள்
[தொகு]இவை தற்காலத்தில் எட்டா நிலையில் உள்ளது. காரணம் பொருட்செலவு அதிகம், போதுமான முன்னேற்பாடுகள் இன்மையால் பின்தங்கி காணப்படுகின்றன. ஆனால், உயிரித்தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு வருங்காலத்தில் சாத்தியமாக உள்ளது. பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் மூதலீடுகளின் மூலம் பல ஆராச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.