நுண்ணிய நெகிழித் துண்டுகள்
நுண்ணிய நெகிழித் துண்டுகள் (Microplastics), சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் மிகச் சிறிய நெகிழித் துண்டுகளாகும்.[1]இவை ஒரு குறிப்பிட்ட வகையான நெகிழி அல்ல, மாறாக 5 மில்லி மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள எந்த வகை நெகிழித் துண்டுகளும் நுண்ணிய நெகிழித் துண்டுகள் என அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் வகைப்படுத்துகிறது.[2]அழகுசாதனப் பொருட்கள், ஆடை மற்றும் தொழில்துறை செயல்முறைகள் உட்படப் பல மூலங்களிலிருந்து இயற்கைச் சூழலமைப்புகளில் நுழைகின்றன.
மூலம்
[தொகு]நுண் நெகிழித் துண்டுகள் என்பது காற்றில் பரவும் துகள்களின் ஒரு வகையாகும். இதன் பெரும்பகுதி துணிகள்[3], டயர்கள் மற்றும் நகர தூசியிலிருந்து வருகிறது. இவை கடல்களிலும் சுற்றுச்சூழலிலும் 80% க்கும் அதிகமாக உள்ளன. [4]
கடல் மற்றும் நீர்வழிகளில் நுண் நெகிழித் துண்டுகளின் மிகப்பெரிய ஆதாரமாக வண்ணப்பூச்சுகளில்[5] தோன்றுகிறது (ஆண்டுக்கு 1.9 மெட்ரிக் டன்). இது மற்ற அனைத்து மூலங்களையும் விட (எ.கா. துணி இழைகள் மற்றும் டயர் தூசி) அதிகமாக உள்ளது.
சுற்றுச்சூழலில் நுண் நெகிழித் துண்டுகளின் இருப்பு பெரும்பாலும் நீர்வாழ் ஆய்வுகள்[6] மூலம் நிறுவப்படுகிறது. இவற்றில் மிதவைவாழி மாதிரிகளை எடுத்துக்கொள்வது, மணல் மற்றும் சேற்று படிவுகளை பகுப்பாய்வு செய்வது, முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பில்லாத நுகர்வுகளைக் கவனிப்பது மற்றும் இரசாயன மாசுபடுத்தும் தொடர்புகளை மதிப்பீடு செய்வது ஆகியவை அடங்கும். இத்தகைய முறைகள் மூலம், சுற்றுச்சூழலில் பல மூலங்களிலிருந்து நுண் நெகிழித்துண்டுகள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
உலகப் பெருங்கடல்களை மாசுபடுத்தும் கிரேட் பசிபிக் குப்பைத் தொட்டியில்[7] 30% வரை நுண் நெகிழ்துண்டுகள் பங்களிக்கக்கூடும், மேலும் பல வளர்ந்த நாடுகளில், கடல் குப்பைகளின் காணக்கூடிய பெரிய துண்டுகளை விட கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு ஒரு பெரிய ஆதாரமாக உள்ளன என்று 2017 பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது[8].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Blair Crawford, Christopher; Quinn, Brian (2016). Microplastic Pollutants (1st ed.). Elsevier Science. ISBN 9780128094068.
- ↑ Arthur, Courtney; Baker, Joel; Bamford, Holly (January 2009). "Proceedings of the International Research Workshop on the Occurrence, Effects and Fate of Microplastic Marine Debris". NOAA Technical Memorandum. https://marinedebris.noaa.gov/sites/default/files/publications-files/TM_NOS-ORR_30.pdf.
- ↑ "microplastics from textiles".
- ↑ "Inhalable microplastic prevails in air".
- ↑ "paint is the largest source of microplastics".
- ↑ "Microplastics in aquatic systems: A review of occurrence, monitoring and potential environmental risks".
- ↑ "great pacific garbage patch- how plastic pollution is choking our oceans".
- ↑ Boucher, Julien; Damien, Friot (2017). primary micro plastics in the oceans: global evaluation of the sources. ISBN 978-2-8317-1827-9.