நுண்ணறிவுச் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நுண்ணறிவுச் சோதனை (Intelligence quotient test) வெளியீட்டாளர்கள் நுண்ணறிவு மதிப்பெண்களை "உயர்ந்த" அல்லது "சராசரி" என வகைபடுத்தியுள்ளனர். அறிவாற்றல் திறன் சோதனைகள் பல வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெளியீட்டாளர்கள் வெவ்வேறு நுண்ணறிவு மதிப்பெண் வகைப்பாட்டை பயன்படுத்துகின்றனர்.

அறிவாற்றல் திறன் சோதனைகளில், இரண்டு முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.[1][2] அவற்றின் மதிப்பெண்கள் இரு வெவ்வேறு முறைகளால் பெறப்பட்டன. முதலாவது முறை வரலாற்று சிறப்பு மிக்க "விகிதம் வகை நுண்ணறிவு" ஆகும். இது சோதனைக்கு உட்படுவாரின் "மண வயது" மற்றும் "கால வயதை" அடிப்படையாகக் கொண்டது.

எடுத்துக்காட்டாக, ஒருவரின் மன வயது பதிமூன்று ஆண்டுகள் மற்றும் சுழிய(0) மாதங்கள், காலவயது பத்து வருடங்கள் மற்றும் சுழிய மாதங்கள் எனில் நுண்ணறிவு விகிதம் 1.3 ஆகும். நுண்ணறிவு விகிதம் 100 ஆல் பெருக்கப்படுகிறது, இதனால் மதிப்பெண்கள் தசம புள்ளிகள் இல்லாமல் அமையும். இவ்வாறு நுண்ணறிவு விகிதம் IQ 130 என எடுத்துக்கொள்ளப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Urbina 2011, Table 2.1 Major Examples of Current Intelligence Tests
  2. Flanagan & Harrison 2012, chapters 8–13, 15–16 (discussing Wechsler, Stanford-Binet, Kaufman, Woodcock-Johnson, DAS, CAS, and RIAS tests)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுண்ணறிவுச்_சோதனை&oldid=3503624" இலிருந்து மீள்விக்கப்பட்டது