நுண்ணறிவுக் கோட்பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நுண்ணறிவுக் கோட்பாடுகள்[தொகு]

   நுண்ணறிவுக் கோட்பாடுகள் ஒரு காரணிக் கோட்பாடு. இதனை முடியரசுக் கொள்கை என்று அழைக்கலாம். இக்கோட்பாட்டின்படி, ஒரு மனிதனின் பொதுத்திறனே அவனது அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாகும். அவனது உயர்வுக்கு அடிப்படையாக அமைந்த பொதுத்திறன் எவ்வாறு அவனது வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். எனவே இக்கோட்பாடு ஏற்புடையதாக இல்லை.

இரு காரணிக் கோட்பாடு[தொகு]

   இக்கோட்பாட்டை 1923 ஆம் ஆண்டு அளித்தவர் சார்லஸ் ஸ்பியர்மேன் என்பவராவர். இவரது கூற்றுப்படி நுண்ணறிவு இரு காரணிகளைக் கொண்டுள்ளது. இவை பொதுத்திறன் காரணி, சிறப்புத் திறன் காரணி அனைத்து அறிவு சார்ந்த செயல்களிலும் ஆற்றலை பயன்படுத்துவதைக் குறிக்கின்றது.
   சிறப்புக் காரணி(1) குறிப்பிட்ட தனிச் செயல்களில் பயன்படுத்துவதைக் குறிக்கின்றது. ஆனால் சில அறிவ சார்ந்த செயல்களில் திறன் அதிகமாகவும், சிறப்புத்திறன் குறைவாகவும் வேறு சிலவற்றில் திறன் குறைவாகவும் தேவைப்படுகிறது. எனவே நுண்ணறிவு என்பது பொதுத்திறன் காரணி மற்றும் சிறப்புத் திறன் காரணி ஆகிய இந்த இரண்டும் சேர்ந்த திறன்களாகும்.

குழுக்காரணிக் கொள்கை[தொகு]

   அமெரிக்க உளவியல் அறிஞரான லுர்யிஸ் எல் தர்ஸ்டன் என்பவரால் இக்கொள்கை அளிக்கப்பட்டது. இவரது கூற்றுப்படி நுண்ணறிவு இரு காரணிகளை மட்டும் கொண்டது அல்ல. இது ஏழு அறிவுத்திறன்களைக் கொண்டது. அவை அடிப்படை மனத்திறன்கள் எனப்படுகின்றன.

சொல் திறன்

    வார்ததைகளால் குறிப்பிடப்படும் கருத்துகளின் பொருளை உணர்ந்து அவற்றை பயன்படுத்தும் திறன்.

சொல் வேகம் - வேகமாகவும் அதே சமயம் எளிதாக சொற்களை நினைத்து பயன்படுத்தக்கூடிய ஆற்றல்.

எண்ணாற்றல் - கணித அடிப்படை செயல் முறைகளான கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் போன்றவற்றை வேகமாவும், சரியாகவும் செய்வதற்கான ஆற்றல்.

இட ஆற்றல் - பொருட்களையும் அவற்றிற்கிடையே உள்ள தொடர்புகளையும் வெளிப்படுத்தும் ஆற்றல்.

நினைவாற்றல்(2) - எளிதில் மனப்பாடம் செய்வதற்கான ஆற்றல்.

புலன் காட்சித் திறன் - வேகமாக அதே சமயத்தில் சரியாக பொருள்களை அறியும் திறன்.

ஆராய்ந்தறியும் திறன் - பல உண்மைகளிலிருந்து பொதுவான உண்மையை ஆராய்ந்தறியும் திறன். எந்த ஒரு அறிவு சார்ந்த செயல்களுக்கும் அல்லது அதற்கு மேற்பட்ட அடிப்படை மனத்திறன்கள் தேவைப்படுகின்றது.

நுண்ணறிவு அமைப்பு கொள்கை அல்லது முப்பரிமாணக் கொள்கை.

   நுண்ணறிவுத் திறனில் அமைப்பை, அதாவது நுண்ணறிவு அமைப்பு மாதிரியை ஜெ.பி.கில்போர்டு அமைத்துள்ளார். இவரது கருத்துப்படி 120 நுண்ணறிவுத் திறன்கள் முப்பரிமாணங்களாகக்(3) கொண்டுள்ளன. அவை, 1. செயல் 2. பொருள் 3. விளைவு என்பதாகும். ஒவ்வொரு பரிமாணமும் சில உட் பிரிவு திறன்களைக் கொண்டது.

மேற்கோள்கள்

பிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag