நுண்கீரை

'நுண்கீரை என்பது முளைகட்டிய பயிர்களுக்கும் வளர்ந்த கீரைகளுக்கும் இடைப்பட்ட உண்ணக்கூடிய தாவரங்களைக் குறிப்பதாகும். சாறு, இடையீட்டு ரொட்டிகள், பழக்கலவை போன்றவற்றில் அழகிற்காகவும் சுவைக்காகவும் இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.[1][2] சில பதார்த்தங்களில் அலங்காரமாகவும் சிலவற்றில் மூலப்பொருளாகவும் பயன்படுத்துகிறார்கள். பல வகை காய்கறிகளிலும், கீரைகளிலும் இதர தாவரங்களிலும் 1 முதல் 3 அங்குலம் நீளம் கொண்ட இந்த நுண்கீரைகள் பெறப்படுகின்றன.
வரலாறு
[தொகு]சான் பிரான்சிஸ்கோவில் 1980களில் இந்த நுண்கீரைகளை சமையல் வல்லுநர்கள் பயன்படுத்தத் தொடங்கினர். தென் கலிபோர்னியாவில் 1990களில் பரவத் தொடங்கியது. தொடக்கத்தில் அறுகுலா, திருநீற்றுப்பச்சை, பீட்ரூட், பரட்டைக்கீரை, கொத்தமல்லி போன்ற தாவரங்களின் முளைவிட்டு வளர்ந்த நிலையில் நுண்கீரைகளாக அலங்கார நோக்கில் பயன்படுத்தத் தொடங்கினர். பின்னர் இந்தப் பழக்கம் அமெரிக்க நாடுமுழுவதும் பரவி உலகம் முழுவதும் பரவியது. இன்று பல தானியங்கள் விதைகளிலிருந்தும் நுண்கீரைகள் வளர்க்கப்படுகின்றன.[3]
முளைகட்டிய பயறு என்பது விதை, வேர், தண்டையும் சேர்த்து உண்ணப்படும் ஆனால் நுண்கீரைகளில் நுனித்தளிரை மட்டுமே உணவாகவோ, அலங்காரமாகவோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. உருளைக் கிழங்கு குடும்பம் தாவரங்களான உருளைக் கிழங்கு, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்றவற்றின் இளங்செடிகளில் உள்ள விசத்தன்மையால் நுண்கீரையாக உண்ணப்படுவதில்லை.[4][5]
தமிழ்நாட்டில்
[தொகு]தமிழ்நாட்டில் நுண்கீரை பயன்பாடு பரவலாகி, சாகுபடியும் கணிசமாகச் செய்யப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Specialty Greens Pack a Nutritional Punch". USDA. Retrieved 23 January 2014.
- ↑ Millard, E. (2014). Indoor Kitchen Gardening: Turn Your Home Into a Year-round Vegetable Garden. Cool Springs Press. p. 63. ISBN 978-1-61058-981-9. Retrieved May 28, 2017.
- ↑ "What are Microgreens?". Waterfields. Archived from the original on 2015-04-02. Retrieved 2015-03-04.
- ↑ "Growing Microgreens and Sprouts Part 3: Growing and Eating". KUED (Utah State University).
- ↑ "Solanine poisoning – how does it happen?". 7 February 2014. http://msue.anr.msu.edu/news/solanine_poisoning_how_does_it_happen.
- ↑ "ஆண்டுக்கு ரூ.3,60,000... வீட்டிலேயே உற்பத்தி செய்யலாம் மைக்ரோ கிரீன்ஸ்… அசத்தும் மதுரைக்காரர்!". விகடன். https://www.vikatan.com/agriculture/rs360000-per-yearmicrogreens-can-be-produced-at-homeamazing-madurai-man. பார்த்த நாள்: 29 August 2025.
- ↑ "நுண்கீரை சாகுபடிக்கு தயாரா". தினமலர். https://www.dinamalar.com/malarkal/vivasaya-malar-agriculture-news-tamil-nadu/vivasayamalar/66407. பார்த்த நாள்: 29 August 2025.
வெளியிணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் நுண்கீரை பற்றிய ஊடகங்கள்