நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம், ஜகார்த்தா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம்
Museum Seni Rupa dan Keramik
இந்தோனேசியாவில் ஜகார்த்தாவில் ஃபகாஹில்லா சதுக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் முகப்புத்தோற்றம்
Map
நிறுவப்பட்டதுஆகஸ்டு 20, 1976
அமைவிடம்ஜேஎல். போஸ். கோடா எண்.2 ஜகார்த்தா பரத், ஜகார்த்தா, இந்தோனேசியா
வகைகலை அருங்காட்சியகம்

நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம் (Museum of Fine Arts and Ceramics) இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியக்ததில் இந்தோனேசியாவின் பாரம்பரிய நுண்கலை மற்றும் பீங்கான் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் ஃபகாஹில்லா சதுக்கத்தின் கிழக்குப் பகுதியில், ஜகார்த்தா வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் வயாங் அருங்காட்சியகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

ஸ்டாதுய்ஸ்பெலீன் என்னுமிடத்தில் நீதிமன்ற வளாகக் கட்டடம் (ca.1930) பின்னர் நுண் கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகம் ஆக மாறியது

நுண் கலை மற்றும் பீங்கான் பொருள்கள் அருங்காட்சியகத்தின் கட்டிடம் ஜனவரி 12, 1870 ஆம் நாளன்று நிறைவு பெற்றது. இந்தக் கட்டடத்தில் முன்பு நீதிமன்றம் இயங்கி வந்தது. இந்த கட்டிடம் பலீஸ் வான் ஜஸ்டிடி என்று அழைக்கப்பட்டது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது, இந்த கட்டிடம் KNIL எனப்படும் ராயல் நெதர்லாந்தின் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தால் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர் இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தோனேசிய இராணுவத்தினரின் தங்கும் இடமாகவும், தளவாடங்கள் வைப்பதற்கான கிடங்காகவும் பயன்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் மேற்கு ஜகார்த்தா மேயர் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. 1974 ஆம் ஆண்டில், இந்த கட்டிடம் ஜகார்த்தா அருங்காட்சியகம் மற்றும் வரலாற்றுத் துறையின் அலுவலகமாக பயன்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 20, 1976 ஆம் நாளன்று ஜனாதிபதி சோஹார்ட்டோவா அவர்களால் இந்த கட்டிடம் நுண்கலை மற்றும் பீங்கான் அருங்காட்சியம் என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.[1]

சேகரிப்பு[தொகு]

இந்தோனேசியாவின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் இந்த நுண்கலை மற்றும் பீங்கான் அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசிய ஓவியர்களான ரொமாண்டிக் ஓவியர் ராடென் சலே மற்றும் உணர்வு வெளிப்பாட்டு ஓவியர் அஃபாண்டி ஆகியோரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தோனேசிய நுண்கலை வரலாற்றில் முக்கியமான காலகட்ட வரிசை முறையில் இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளன. தி ரேடன் சலேஹ் காலத்தைச் சார்ந்த அறை (1880-1890), ஹிந்தியா ஜெலிடா அறை (1920 கள்), பெர்சாகி அறை (1930 கள்), ஜப்பானிய ஆக்கிரமிப்புக் கால அறை (1942-1945), பெண்டிரியன் சங்கர் ( "கலை ஸ்டுடியோவை நிறுவுதல்") அறை (1945-1950), உண்மைத்தன்மையின் பிறப்பு அறை (1950 கள்), மற்றும் தற்கால கலை அறை (1960 கள் முதல் - இப்போது வரை).

இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த பீங்கான் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாரம்பரிய மட்பாண்ட, பீங்கான் பொருள்களும் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சீனா, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான் மற்றும் ஐரோப்பாவிலிருந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பீங்கான் பொருள்களின் சேகரிப்புகளும் இங்கு காட்சியில் உள்ளன.

சிறப்பு[தொகு]

இந்த அருங்காட்சியகத்தில் சுமார் 400 நுண்கலைப் பொருள்கள் உள்ளன. இந்தோனேசியாவின் கலை வரலாற்றுக்கு பயனுள்ள சில தலைசிறந்த படைப்புகளில் சிறப்பானவையாக கருதப்படுபவவை இங்கு உள்ளன. அவற்றுள் ஹேந்திர குணவனின் "புரட்சி மணமகள்" ஓவியம், ராடென் சலேவின் "லெபக் ரீஜண்ட்" ஓவியம், துல்லாவின் "மதர் கிவ் சிக்" ஓவியம், எஸ். சுட்ஜோஜோனோவின் "திரிதூரா துணை ராணுவப் படைகள்" ஓவியம், மற்றும் அஃபாண்டியின் சுயப்படம் ஓவியம், பாலியைச் சேர்ந்த பாரம்பரிய மற்றும் செவ்வியல் சிற்பம், ஜோகோட் மற்றும் குடும்பங்களைச் சேர்ந்த மந்திர மற்றும் குறியீட்டு மரப் பொம்மைகள், ஜி. சித்தார்தா, ஓஸ்மான் எஃபெண்டி போன்ற நவீன கலைஞர்களின் மரப்பொம்மைகள் மற்றும் மர சிற்பங்கள் போன்றவை அடங்கும்.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "The Pure Art and Ceramic Museum". Archived from the original on 2010-02-05.
  2. Fine Art and Ceramic Museum